Share via:
தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை இன்று ஒரு நாள் மாற்றம் செய்யப்படுவதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
வருகிற 18ம் தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முந்தைய நாட்களான சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதாலும், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடவும், சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் பொதுமக்கள் ரெயில், பேருந்துகளில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். அவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
விடுமுறை _நாட்களை சொந்த ஊர்களில் கழிக்க விரும்பும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இரவு நேரத்தில் புறப்படும் கடைசி ரெயில் சேவை 10 மணியாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, பீக் டைம்களில் அதாவது இரவு 8ம ணி முதல் 10 மணிவரையில் மெட்ரோ ரெயில் சேவைகள் 9 நிமிடத்திற்கு ஒரு ரெயில் என்பதற்கு மாற்றாக 6 நிமிட இடைவெளியில் ஒரு ரெயில் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கவும், குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடையவும் பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரெயில் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரெயிலின் இந்த அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.