News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

வேடசந்தூர் கல் குவாரி வெடி விபத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பாறைகளை உடைக்க வைக்கப்பட்ட வெடி, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் சிக்கி நாராயணன், மேத்யூ என்ற இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 

மேலும் வெடி விபத்தில் எதிர்பாராத விதமாக சிக்கிய கோபால், மாரியப்பன் என்ற 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உயிரிழந்த 2 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதேசமயம் வெடி விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link