News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு சார்பில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருடப்படம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை தி.மு.க. இளைஞர் அணியினர் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.

 

அதற்கு முன்னதாக சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அங்கு வண்ண மலர்களால்  அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.பி.டி.ஆர். பாலு உள்ளிட்ட தி.மு.க. கட்சி மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link