News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

மிக்ஜாம் புயல் நிவாரணப்பணி: முதலமைச்சரிடம் திருவாவடுதுறை ஆதீனம் காசோலை வழங்கினார்!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக, திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நிதி வழங்கினார். கடந்த டிசம்பர் மாதம் 3  மற்றும் 4 (2023) ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெரியளவில் சேதத்தை சந்தித்தது. பொது மக்களின் குடியிருப்புகளுக்குள் மழை வெள்ள நீர் புகுந்து அவர்களின் அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தியது. இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் […]

வடகலை தென்கலை காட்டுமிராண்டித்தன மோதல்… அடிதடி, குஸ்தி, கொலை மிரட்டல்…!

வேலை இல்லாத வெட்டிகள், ஜாதிப்பெருமை பேசும் பழமைவாதிகள், ஆணவம் பிடித்தவர்கள் மட்டுமே தங்கள் ஜாதிப் பெருமைக்காக மல்லுக்கட்டுவார்கள் என்று விமர்சனம் செய்வோரின் வாயை அடைக்கச் செய்யும் அளவுக்கு வடகலை, தென்கலை பிரிவினருக்கிடையே நடைபெற்ற அடிதடி விவகாரம் சந்தி சிரிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தின் பார்வேட்டை திருவிழாவில் வரதராஜபெருமாள் எழுந்தருளும் வைபவம் நடைபெறும். அதன்படி, கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலையின் மீது எழுந்தருளினார். தேவராஜ சுவாமி பார்வேட்டைக்கு […]

புத்தாண்டில் பிரதமர் யோகம் யாருக்கு..? ஜோதிடர் ஷெல்வி என்ன சொல்கிறார்..?

கொரோனா அலை இல்லையென்றாலும் ஏகப்பட்ட சிக்கல்கள், நன்மைகள் கொடுத்த 2023 விடைபெற்று போய்விட்டது. இந்த புத்தாண்டு அனைத்து நலனும் மக்களுக்கு வழங்கட்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்துச்செய்தி கொடுத்திருக்கிறார். அதுசரி, அடுத்த ஆண்டு இதேபோன்று நரேந்திர மோடி பிரதமராக இருந்து வாழ்த்துச்செய்தி கொடுக்க முடியுமா என்பதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக இருக்கிறது. இரண்டு முறை பிரதமராக இருந்தவர் மூன்றாவது முறையும் பிரதமராவா..? இதுகுறித்து வட இந்திய பிரபல ஜோதிடர் ஷிராக் தாருவல்லா என்ன கூறியிருக்கிறார் என்பதைப் […]

அயோத்தி ராமரை தரிசிக்க நாடு முழுவதும் இலவச ரயில்… பா.ஜ.க. பலே ஏற்பாடு

அயோத்தியில் மிகப்பிரமாண்டமான ராமர் கோயில் கட்டும் பணி முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டது. இந்த கோயிலை அடுத்த மாதம் ஜனவரி 22-ல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த விழா மிகவும் கோலாகலமாக நடக்கும் என்றாலும், நாடு முழுவதும் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டால், சமாளிக்க முடியாது என்பதால், பொதுமக்கள் திறப்பு விழாவில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அயோத்தி ராமரை தரிசிக்க பொதுமக்களுக்கு இலவச ஏற்பாட்டை பா.ஜ.க. அரசு செய்துதருகிறது. இதற்காக  ரயில்வே துறையில் நாடு முழுவதிலும் […]

பாலகன் இயேசுவின் வருகை… கிறிஸ்மஸ் சிறப்புக் கட்டுரை

உலகம் முழுக்க கிறிஸ்தவ மக்களால் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிற ஒரு பண்டிகை என்றால், அது  கிறிஸ்துமஸ்தான். ஆண்டுதோறும்  டிசம்பர் 25ம் தேதி இப்பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை, ‘கிறிஸ்ட் மாஸ்’ என்ற வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானதாகச் சொல்லப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன்முதலில் 4வது நூற்றாண்டைச் சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாகச் சில வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. ஆனால் வேறு சில பிரிவுகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, ஜனவரி 6ம் […]

கர்நாடக ஹிஜாப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி! முதலமைச்சர் சித்தராமையா உறுதி!

கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் ஹிஜாப் பிரச்சினைக்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா முற்றுப்புள்ளி வைத்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.   கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்று வரும் இஸ்லாமிய மாணவிகள் மத அடையாள உடையான ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின் போது பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. இதற்கு முஸ்லிம் மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஹிஜாப் அணிவது எங்கள் […]

பார்த்தசாரதி சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி! அமைச்சர் சேகர்பாபு ஆய்வு!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.   தமிழகத்தில் உள்ள அனைத்து வைணவக் கோவில்களிலும் வருகிற 23ம் தேதி வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் ஒவ்வொரு கோவில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   அதன்படி இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய […]

திருப்பதிக்கு பாத யாத்திரையாக சென்ற நடிகை தீபிகா படுகோன்! பக்தர்களுடன் செல்பி!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் திருப்பதி மலையேறி 2.30 மணி நேரம் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தார். பிரபல இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘பைட்டர்’ திரைப்படம் வருகிற (2024) ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் ஹிருத்திக்ரோஷன் மற்றும் நடிகை தீபிகா படுகோட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீப காலமாகவே திரைப்பட வெளியீட்டிற்கு முன்பாக திரைப்படத்தின் வெற்றிக்காக படக்குழுவினர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்வது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் பைட்டர்  திரைப்படம் […]

2024 தேர்தலுக்கு கிருஷ்ண ஜென்ம பூமி..! ஸ்பீடு எடுக்கும் பா.ஜ.க.

மத்திய பா.ஜ.க. ஆட்சியில் அமர்வதற்கு ராம ஜென்ம பூமி விவகாரம் கை கொடுத்ததை யாரும் மறந்துவிட முடியாது. அயோத்தியில் மசூதியை இடித்துவிட்டு, அங்கு ராமருக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்பது பாஜகவின் கனவாக இருந்தது. அதையே தேர்தல் வாக்குறுதியாக கூறி ஆட்சியை பிடித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பினை அடுத்து உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இப்போது 2024 தேர்தலை கணக்கிட்டு கிருஷ்ணர் பிறந்த மதுராவை பா.ஜ.க. குறி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. […]

தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும்! கேரளா உறுதி!

தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பும் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள தலைமை செயலாளர் உறுதியளித்துள்ளார்.   சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வரும் நிலையில், பல மணிநேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசித்து வரும் தமிழக பக்தர்கள் 6 கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி கேரள ஐகோர்ட்டுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.   அதில் நிலக்கல் முதல் பம்பை வரையிலான பகுதிகளில் பக்தர்கள் போலீசாரின் உதவியுடன் பேருந்துகளில் […]