News

Follow Us

கொரோனா அலை இல்லையென்றாலும் ஏகப்பட்ட சிக்கல்கள், நன்மைகள் கொடுத்த 2023 விடைபெற்று போய்விட்டது. இந்த புத்தாண்டு அனைத்து நலனும் மக்களுக்கு வழங்கட்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்துச்செய்தி கொடுத்திருக்கிறார்.

அதுசரி, அடுத்த ஆண்டு இதேபோன்று நரேந்திர மோடி பிரதமராக இருந்து வாழ்த்துச்செய்தி கொடுக்க முடியுமா என்பதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக இருக்கிறது. இரண்டு முறை பிரதமராக இருந்தவர் மூன்றாவது முறையும் பிரதமராவா..?

இதுகுறித்து வட இந்திய பிரபல ஜோதிடர் ஷிராக் தாருவல்லா என்ன கூறியிருக்கிறார் என்பதைப் பார்க்கலாம். மோடி 1950, செப்டம்பர் 17 பகல் 11 மணிக்கு பிறந்திருக்கிறார். அவரது ராசி விருச்சிகம் அனுசம் நட்சத்திரம்.

மோடியின் ஜாதகத்தில் ராஜ யோகம் இருப்பதாலே அவரால் குஜராத் முதல்வர், இந்திய பிரதமர் போன்ற பதவிகளுக்கு வரமுடிந்திருக்கிறது. இந்த யோகம் மோடிக்கு 2028 வரையிலும் பலமாக இருக்கிறது. ஆகவே, மீண்டும் மோடியே பிரதமராக வருவார் என்று உறுதியாகக் கூறுகிறார்கள்.

அதேநேரத்தில் மோடியின் ஜாதகம் என்பது உண்மை இல்லை. அவருடைய பிறந்த தேதியும், நேரமும் உண்மையில்லை என்பதால், இந்த கணிப்பை ஏற்கவே முடியாது என்றும் சில ஜோதிடர்கள் சொல்கிறார்கள்.

அதேநேரம், நம்மூர் ஜோதிடரான ஷெல்வி, மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வந்து அமர்வார் என்று மிகவும் உறுதியாகக் கூறுகிறார்.

ஜோதிடர் ஷெல்வி பிரமாதமாக கணிப்பார். அதாவது ரஜினிகாந்த் அரசியலுக்கு நிச்சயம் வருவார், இந்திய அணி ஒரு நாள் உலகக்கோப்பையை வெல்லும் என்றெல்லாம் கணித்துக் கொடுத்தவர். ஷெல்வி சொன்னால் நிச்சயம் தலைகீழாகத்தான் நடக்கும் என்றும் பா.ஜ.க.வினரே அச்சத்தில் கூறுகிறார்கள்.

மோடிக்கு இப்படியொரு சிக்கலா…  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link