News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்தில் பிரதமரின் ஆன்மிக யாத்திரை…? ராமர் கோயில் திறப்புக்கு தமிழகத்தில் லீவு இல்லையா..?

தமிழகம் வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்தார். அதோடு பொதிகை என்ற பெயரில் இயங்கிவந்த சென்னை தூர்தர்சனுக்கு, ‘டிடி தமிழ்’ தொலைக்காட்சி என்ற புதுப்பொலிவு பெற்ற சேவையை தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்புவிழாவுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் அப்படியொரு அறிவிப்பு பிரதமர் முன்பு ஸ்டாலின் கொடுப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் தமிழகத்திலும் ஆன்மிக […]

வடகலை தென்கலை காட்டுமிராண்டித்தன மோதல்… அடிதடி, குஸ்தி, கொலை மிரட்டல்…!

வேலை இல்லாத வெட்டிகள், ஜாதிப்பெருமை பேசும் பழமைவாதிகள், ஆணவம் பிடித்தவர்கள் மட்டுமே தங்கள் ஜாதிப் பெருமைக்காக மல்லுக்கட்டுவார்கள் என்று விமர்சனம் செய்வோரின் வாயை அடைக்கச் செய்யும் அளவுக்கு வடகலை, தென்கலை பிரிவினருக்கிடையே நடைபெற்ற அடிதடி விவகாரம் சந்தி சிரிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தின் பார்வேட்டை திருவிழாவில் வரதராஜபெருமாள் எழுந்தருளும் வைபவம் நடைபெறும். அதன்படி, கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலையின் மீது எழுந்தருளினார். தேவராஜ சுவாமி பார்வேட்டைக்கு […]

மீண்டும் வள்ளுவருக்கு காவி, பட்டை..! கவர்னர் ரவியை ரவுண்டு கட்றாங்க  

திருவள்ளுவர் படத்துக்கு காவி ஆடை அணிவித்து நெற்றி, கைகளில் திருநீறு பட்டை போட்ட படத்தைப் போட்டு, ‘ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்…’ […]

ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி 11 நாள் விரதம்..! அதுசரி, திரவுபதி முர்முவை கூப்பிடுவாங்களா.. இல்லையா..?

அயோத்தியில் ராமர் கோயில் திறப்புவிழா நாடு முழுவதும் பண்டிகை போலவே கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நமது பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். ’’பல தலைமுறைகளாக, பல ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த, எண்ணற்றோரின் தியாகம் நிறைவேறும் திருநாள், வரும் ஜனவரி 22 ஆகும். அயோத்தியில் பகவான் ஶ்ரீராமர் திருவுருவச் சிலையை, பிரதிஷ்டை செய்யும் புண்ணிய வாய்ப்பு தமக்குக் கிடைத்திருப்பதாகவும், பாரதம் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் பக்தர்களின் பிரதிநிதியாக, அந்தப் புனிதமான […]

எடப்பாடி பழனிசாமியின் கால் வலியை ராமர் தீர்த்துவைப்பார்… விழாவுக்கு அழைக்கும் பா.ஜ.க.

அயோத்தி கும்பாபிஷேகத்திற்கு கூட்டணிக் கட்சிகளை அழைத்து முக்கியத்துவம் கொடுப்பதற்கு பா.ஜ.க. விரும்புகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் முக்கியக் கூட்டணிக் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. மீண்டும் உடைந்து சிதைந்து நிற்கிறது. சமீபத்தில் இஸ்லாம் இயக்கத்தின் மதுரை மாநாட்டில் கலந்துகொண்டு, தன்னை சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக காட்டிக்கொள்ள நினைக்கிறார். இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வாரா என்பது கேள்வியாக இருந்தது. இதுகுறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’அயோத்தி ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு யார் […]

வைரலாகும் அண்ணாமலை காவடியாட்டம்… அடுத்த அரஸ்ட் தளி ராமச்சந்திரன்..?

அண்ணாமலை தமிழகத்தில் என் மண் என் மக்கள் நடைபயணத்தில் ஹோட்டலில் புரோட்டா போடுவது, டீ ஆற்றுவது, பாட்டிகளை கட்டிப் பிடிப்பது போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்துவருகின்றன. இந்த நிலையில் அண்ணாமலை முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் காவடியை தோளில் வைத்து ஆடியது பெரும் பரபரப்பாகியுள்ளது. அண்ணாமலையின் பயணத்தில் தமிழகத்தில் 150 ஆவது சட்டமன்றத் தொகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், மாபெரும் மாநாடு போன்ற மக்கள் வெள்ளத்தின் நடுவே, வெகு சிறப்பாக நடந்தேறியது. இங்குதான் காவடியாட்டம் போட்டு பரபரப்பாக்கினார். இந்த பயணத்தில் […]

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர்களுடன் ஸ்டாலின் கொண்டாடிய சமத்துவப் பொங்கல்… கிடுகிடு சர்ச்சை

தமிழகத்தில் பொங்கல் விழா களை கட்டத் தொடங்கியிருக்கிறது. தமிழக முதல்வர் கொளத்தூர் தொகுதியில் இருக்கும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் சமத்துவப் பொங்கலாக மனைவி துர்காவுடன் இணைந்து கொண்டாடினார். அதோடு இந்த பொங்கல் விழாவில் 1000 மாணவிகள் மற்றும் மகளிருக்கு பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கினார். இந்த விழாவில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மாணவியர்களும் கலந்துகொண்டு கொண்டாடியது சிறம்ப்பம்சமாகும். அதேநேரம், இதற்கு கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்துக்களின் பண்டிகையான பொங்கலில் எப்படி இஸ்லாமியர்களையும் பிற சமயத்தினரையும் இணைத்துக் கொண்டாடலாம் […]

அடுத்து மசூதிக்குள் நுழைகிறாரா அண்ணாமலை..? சூடு பிடிக்கும் நெற்றியில் திருநீறுடன் மாதா சிலைக்கு மாலை விவகாரம்

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் பி.பள்ளிப்பட்டு பகுதியில் தேவாலய சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவிக்க முன்வந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாதாவுக்கு அண்ணாமலை மாலை போடுவதை தடுத்த கிருஸ்துவ இளைஞர்களுக்கும் சர்ச் வாசலிலே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அண்ணாமலையை உள்ளே செல்லக்கூடாது என்று எகிறிய இளைஞர்களிடம், ‘அடுத்து நான் பத்தாயிரம் பேரோடு வந்து மாலை போட்டால் என்ன செய்வீர்கள்’ என்று கேட்டு மிரட்டியதும் போலீஸ் வந்து சம்பந்தப்பட்ட இளைஞர்களை அப்புறப்படுத்தியுள்ளது. இதையடுத்து ஆதரவாளர்களுடன் […]

ராமர் கோயில் திறப்புவிழாவில் ரஜினி, இளையராஜாவுடன் துர்கா ஸ்டாலின்..?

ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோவில் திறக்கப்படுகிறது. இந்த கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 16ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை பிரமாண்டமாக நடைபெறுகிறது. இங்கு ஸ்ரீராமர் தவிர அன்னபூரணி, அனுமன், மகரிஷி வால்மீகி, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அகஸ்தியர், நிஷாத் ராஜ், ஷப்ரி போன்ற கோவில்களும் இந்த வளாகத்தில் கட்டப்பட உள்ளன. இங்குள்ள தூண்களில் சூரியன், சிவன், பார்வதி, விநாயகர் சிலைகள் மற்றும் மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த கும்பாபிஷேக விழாவிற்காக 460 கைவினைஞர்கள் […]

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா! ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரில் அழைப்பு!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்குமாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இம்மாதம் (ஜனவரி) 22ம் தேதி நடைபெற உள்ளது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சிறப்பாக செய்து வருகிறது. மேலும் அன்று நண்பகல் 12.20 மணியளவில் கோவில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய […]