Share via:
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டதற்காக முதல்வர் விஜய்யை
சந்தித்து நன்றி கூறியது, பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக்
குழு. இந்த நிலையில், அரசு கையகப்படுத்திய
நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைப்பதற்கான வாய்ப்புகளைத் தேடுவதற்கு விஜய் உத்தரவிடுள்ளதாக
செய்திகள் வருகின்றன.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால்
கைவிடப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டன. அதோடு, நிலத்தைக் கொடுத்தவர்களுக்கே
அந்த நிலத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.
இந்த நிலையில் சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார்,
‘’பரந்தூருக்கு 90% சதவிகித நிலம் கையகபடுத்தனதா திமுக சொன்னது பச்சைப் பொய் 48% சதவிகித
நிலம்தான் கையகபடுத்தி இருக்காங்க. இன்னும் அங்க சுற்றுச்சூழல் அனுமதி கூட வாங்கவில்லை.’’
என்று விளக்கம் கொடுத்தார்.
அதேநேரம் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, ‘’பரந்தூர் விமான நிலையத்திற்காகக்
கையகப்படுத்தப்பட்ட நிலங்களை ‘மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போகிறோம்’
என தொழில்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் பதில் அளித்திருக்கிறார். இந்த பதில் பரந்தூர்
மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஆகவே, இந்த நிலத்தை எப்படியாவது விவசாயிகளுக்கு
திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று விஜய் உத்தரவு போட்டிருக்கிறார்.
நிலத்தைத் திருப்பிக் கொடுத்தால் பணத்தை திரும்ப வாங்கவேண்டும்,
அதற்கு சாத்தியமில்லை என்று அதிகாரிகள் கூறிய நிலையில், வேறு வழி யோசியுங்கள் என்று
கூறியிருக்கிறார் விஜய்.
இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இதற்காக அறிக்கை கொடுத்துள்ளனர்.
கம்யூனிஸ்ட் சண்முகம் இன்று, ‘’பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட
நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர், மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்
போகிறோம் என்று பதிலளித்துள்ளார். நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற
சட்டம் 2013-ன் அடிப்படையில், குறிப்பிட்ட திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம்
5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ அல்லது அந்தத் திட்டம் கைவிடப்பட்டாலோ,
நிலத்தைச் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். வேறு ஒரு திட்டத்திற்கு
மாற்ற முடியாது. எனவே, சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது. விவசாயிகளிடம்
நிலத்தை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்…’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
நல்லதே நடக்கட்டும்.
