News

Follow Us

வேலை இல்லாத வெட்டிகள், ஜாதிப்பெருமை பேசும் பழமைவாதிகள், ஆணவம் பிடித்தவர்கள் மட்டுமே தங்கள் ஜாதிப் பெருமைக்காக மல்லுக்கட்டுவார்கள் என்று விமர்சனம் செய்வோரின் வாயை அடைக்கச் செய்யும் அளவுக்கு வடகலை, தென்கலை பிரிவினருக்கிடையே நடைபெற்ற அடிதடி விவகாரம் சந்தி சிரிக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தின் பார்வேட்டை திருவிழாவில் வரதராஜபெருமாள் எழுந்தருளும் வைபவம் நடைபெறும். அதன்படி, கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலையின் மீது எழுந்தருளினார்.

தேவராஜ சுவாமி பார்வேட்டைக்கு வரும்போது வடகலை, தென்கலை சார்ந்த பிரிவினர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக திவ்ய பிரபஞ்சம் யார் முதலில் பாடுவது என்ற பிரச்சனை உள்ளது. இது தொடர்பாக வழக்கு பல ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தேவராஜ் சுவாமி வைபவம் நடந்து கொண்டிருந்தபோது வடகலை தென்கலை இருபிரிவினர்களுகிடையே தோஸ்த்ர பாடம் எனப்படும் சமஸ்கிருத பாடல் பாடி வரும் போது, வடக்கலை தென்கலை சேர்ந்தவர்களுக்குள் வாய் சண்டை ஏற்பட்டது. சற்று நேரத்தில் தள்ளுமுள்ளாக மாறி கடைசியில் அடிதடியில் முடிந்தது. ஒரு பிரிவினரை மற்ற பிரிவினர் விரட்டி விரட்டி தாக்கும் காட்சிகளும் வெளியாகி, ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ரோட்டோர ரவுடிகளைப் போன்று வடகலை தென்கலை பிரிவினர் போடும் சண்டை வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. எந்த வேலைக்கும் போகாம கோயில் சொத்தை கொள்ளை அடிக்கும் கும்பல் போடும் சண்டையைப் பார்க்கும்போது, ரவுடிகள் பங்கு பிரிப்பதற்கு அடித்துக்கொள்வது போலவே இருக்கிறது. சரிதான்,

மோடி வந்து பஞ்சாயத்து பண்றதுக்காகத்தான் சண்டை போடுறாங்களோ… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link