News

Follow Us

அயோத்தியில் மிகப்பிரமாண்டமான ராமர் கோயில் கட்டும் பணி முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டது. இந்த கோயிலை அடுத்த மாதம் ஜனவரி 22-ல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த விழா மிகவும் கோலாகலமாக நடக்கும் என்றாலும், நாடு முழுவதும் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டால், சமாளிக்க முடியாது என்பதால், பொதுமக்கள் திறப்பு விழாவில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அயோத்தி ராமரை தரிசிக்க பொதுமக்களுக்கு இலவச ஏற்பாட்டை பா.ஜ.க. அரசு செய்துதருகிறது. இதற்காக  ரயில்வே துறையில் நாடு முழுவதிலும் இருந்து 275 சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ‘ராம் தர்ஷன் அபியான்’ எனும் பெயரில் ஜனவரி 24ல் தொடங்கும் இந்த இலவச யாத்திரை மார்ச் 24 வரை நடைபெற உள்ளது.

 

இதில், உணவு உள்ளிட்ட சகல வசதிகளுடன் 5 கோடி மக்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.

ராமர் கோயில் திறப்பு விழா முடிந்த பிறகு தொடங்கப்பட இருக்கும் இலவச ஆன்மிகப் பயணத்திற்கான முன்பதிவுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

ராமர் பக்தர்களுக்கு யோகம் தான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link