News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

12 ஆண்டுகளுக்கு பிறகு! மதுரை கள்ளழகர் கோவில் குடமுழுக்கு விழா!

12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை கள்ளழகர் கோவிலில் இன்று குடமுழுக்கு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. மதுரை அருகே உலகப்பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில் கள்ளகழகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு இக்கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்ற நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு ரூ.2 கோடி செலவில் ராஜகோபுர திருப்பணிகள் நடத்தி முடிக்கப்பட்டன. திருக்கல்யாண மண்டப வளாகத்தில் நேற்று முன்தினம் (நவ.21) யாகசாலை பூஜைகளுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. […]

பஞ்ச ரதங்களின் தேரோட்டம்! திருவண்ணாமலையில் விழாக்கோலம்!

பஞ்சரதங்களின் தேரோட்டத்தை முன்னிட்டு திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 17ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவின் 7ம் நாளான இன்று திருவண்ணாமலையில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முழு முதல் கடவுளான விநாயகரின் தேரை மாட வீதிகளில் பக்தர்கள் இழுச் சென்றனர். அதற்கு அடுத்தபடியாக 2வது வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானின் தேரோட்டம் நடைபெற்றது. விநாயகர் மற்றும் முருகப்பெருமானின் 2 […]

கொடியேற்றத்துடன் தொடங்கிய தீபத்திருவிழா! திருவண்ணாமலையில் விழாக்கோலம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று (நவ.17) கொடியேற்றதுடன் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக தொடங்கியது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழ்வது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை மாத தீபத்திருவிழா உலகப்பிரசித்தி பெற்றது. கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 2 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதன் பின்னர் 64 அடி […]

கந்தசஷ்டி விழா! திருச்செந்தூருக்கு 2 சிறப்பு ரெயில்கள் இயக்கம்!

கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.   தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 13ம் தேதி கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இத்திருவிழா வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளநிலையில் முக்கிய நிகழ்வான […]

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி! லண்டனில் சோகம்!

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் லண்டனில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகையை கடந்த 12ம் தேதி இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாட்டினரும் கோலாகமாக கொண்டாடினர். அதேபோல் லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினரும் தீபாவளி பண்டிகையை கடந்த ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக கொண்டாடினார்கள். தீபாவளி பண்டிகையன்று இரவு 10.30 மணியளவில் இவர்களின் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு 2 […]

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்! நவ.17 கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 17ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டு கிரிவலம் வருவார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து 10 நாட்கள் தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முக்கிய […]

இன்று கந்தசஷ்டி விழா தொடக்கம்! விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர்!

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூரில் ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழாவில் கலந்து கொள்வதற்காகவும், முருகனை தரிசனம் செய்யவும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி பூஜை இன்று யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இவ்விழாவின் போது யாகசாலையில் இருந்து ஜெயந்திநாதர் எழுந்தருளல், வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு உள்ளிட்ட பாடல்கள் இசைக்கப்பட்டு, மேள […]

தீபாவளி பண்டிகை! நவ.9 முதல் 10,975 சிறப்பு பேருந்துகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற நவம்பர் 9ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 10,975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. பொங்கல், தீபாவளி, தொடர் விடுமுறை, பண்டிகைகளை கொண்டா சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்போது பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. அந்த வகையில் வருகிற நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் […]

இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் இன்று!

நடப்பாண்டான 2023ம் ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் இன்று நிகழ உள்ளது. நிலவுக்கும், சூரியனுக்கும் நடுவே பூமி வரும்போது ஏற்படும் நிகழ்வையே நாம் சந்திரகிரகணம் என்கிறோம். அந்த வகையில் இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இன்று (அக்.28) நள்ளிரவு 1.03 நிமிடத்தில் துவங்கும் சந்திரகிரகணம் 2 மணி 23 நிமிடத்தில் முடிவடைகிறது. சந்திரகிரகணத்தை முன்னிட்டு இந்தியாவில் பார்க்க முடியும் என்பதால் 8 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படும் என்று ஏற்கனவே […]

சந்திரகிரகணம்! திருப்பதி கோவில் 8 மணிநேரம் மூடப்படும்!

சந்திரகிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோவில் 8 மணிநேரம் மூடப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வருகிற 29ம் தேதி சந்திரகிரகணம் நிகழ உள்ளது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியிருப்பதாவது:- வருகிற 29ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கி 2.22 மணிக்கு சந்திரகிரகணம் நிறைவடைய உள்ளது. கிரகண நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன்பாகவே கோவில் கதவுகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 28ம் தேதி (சனிக்கிழமை) இரவு 7.05 மணியளவில் திருப்பதி ஏழுமலையான் […]