எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்! முக்கிய தகவல்கள்!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளநிலையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்ல உள்ளதாக கட்சித் தலைமையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டெல்லி செல்லும் அவர் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கிவே எடப்பாடி பழனிசாமியின் இந்த […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள்! குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

சென்னை உயர்நீதிமன்ற 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளில் காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் உச்சநீதிமன்ற கொலீஜியம் இறங்கியுள்ளது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் முடிவு செய்துள்ளது. இது குறித்து உச்சநீதிமன்ற கொலீஜியம் இணையத்தில் தீர்மானம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக […]
சனாதனத்திற்கு எதிராக பேசும் நாக்கை பிடுங்குவோம்! மத்திய மந்திரி ஆவேசம்!

சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கைப் பிடுங்கிவிடுவோம் என்று மத்திய அமைச்சர் அச்சுறுத்தும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு, கொரோனா போன்ற காய்ச்சல்களை போல ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த பேச்சுக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில் உச்சகட்டமாக அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் […]
ஸ்டாலினை காக்க வைத்து கடுப்பேத்திய ரகுமான் !

ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து திரைப்படங்களில் இசையமைத்து வந்தாலும், தனது ரசிகர்களுக்காக அடிக்கடி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதன் மூலம் வரும் பணத்தையும் பல்வேறு நற்காரியங்களுக்காக செலவிட்டு வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பை உருவாக்கியுள்ளது. அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற இருந்த ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி, தொடர் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் அதற்காக வாங்கிய டிக்கெட்டுகளை அடுத்த நிகழ்ச்சியின் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிப்பு […]
சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை கைதி எண் கொடுக்கப்பட்டது!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த 9ம் தேதி அதிகாலை 6 மணிக்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 14 நாள் நீதிமன்ற காவல் என்று உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் முன்பாக தெலுங்கு தேசம் கட்சியினர் திரளாக திரண்டதால் கடந்த சில நாட்களாகவே ஆந்திர மாநிலம் […]
அமலாக்கத்துறையின் அடுத்த செக்! முதலமைச்சர் மருமகனின் ஆடிட்டர்தான்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், மணல்குவாரி அதிபர்கள், தொழில் அதிபர்களின் வீடுகளிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் ஆடிட்டரான சண்முகராஜ் […]
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: தகுதியுள்ள 1.06 கோடி பேர்! முக்கிய தகவல்கள் உள்ளே!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு வருகிற 15ம் தேதி முதல் மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் அறிவித்துள்ளார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகையாக மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் வருகிற 15ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்பாட்டு வரும் […]
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களுக்கு செக்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் தற்போது அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வருவது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மேற்கொண்டதாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14ம்தேதி கைது செய்யப்பட்டார். அவரது கைது சட்டப்படியானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக அமைச்சர் […]
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! வெளியான ரகசிய தகவல்கள்!

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய முடிவுகள் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து கழக செயலாளர்களும், மாவட்ட கழக செயலாளர்கள் திரளாக பங்கேற்றனர். அப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஏற்கனவே ஆதரவு அளிப்பதாக அறிவித்த எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை […]
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு! அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை கடந்த மாதம் ஆகஸ்டு 12ம் தேதி சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதன் பின்னர் […]

