Share via:
நாளை சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பதிலுரை இடம்பெறுகிறது. இந்த
நிலையில் திங்கட்கிழமை என்றாலே விஜய்க்கு அதிர்ஷ்டமான நாள் என்றும் திமுகவுக்கு பீடை
என்றும் தவெக தொண்டர்கள் பின்னிபெடலெடுக்கிறார்கள்.
இதுகுறித்து பேசும் தவெகவினர், ‘’மே 4, திங்கட்கிழமை! வெற்றித்
தலைவர் வாகை சூடி வரலாறு திரும்பிய நாள். கொளத்தூரில் கொத்து பரோட்டா போடப்பட்டு வரலாறு
படைத்த நாள். ஏறிய ஒவ்வொரு மேடையிலும் சொல்லிச் சொல்லி அடித்த அடியில், இறுமாப்புடன்
“இருநூறு வெல்வோம்” என்றவர்கள் இடிந்துபோய், இயல்பைத் தொலைத்து அலைகின்றனர்
அதேபோல் செப்டம்பர் 7, திங்கட்கிழமை. “பேசு… பேசு…” என்று
சொல்லிவிட்டு, வெற்றித் தலைவர் பேசும்போது… “முடிந்தால் File-ஐ Open செய்யுங்கள்!”
என்று வீரவசனம் பேசிவிட்டு, File-ஐ Open செய்ததும், பெருமைக்கு எருமை மேய்த்த உத்தமர்கள்
அழுது கரைவதைப் போல… ஓட்டநிதிக்கு கரையாமல் அமர்ந்திருக்கத் தெம்பு இருக்கிறதா?
“Party Fund, மக்கள் பணத்தை இதற்கு முன்னால் தொட்டவர்களையும் விடமாட்டோம்!”
என்று சொன்னபோது, “எடுத்தேன் பாரு ஓட்டம்!” என்று ஓட்டமெடுத்ததைப் போல, மீண்டும் ஓடாமல்
பொறுமையாக அமர்ந்திருக்கத் திராணி இருக்கிறதா? இன்னும் ஒரே ஒரு நாள் தான் இருக்கிறது!
தண்ணீரைக் கூடுதலாகக் குடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், சட்டப்பேரவையில் அமைச்சர்களின்
பதிலுக்கே மடக்கு மடக்கென தண்ணீர் குடித்து, உங்கள் பயம் பல் இளித்தது.
லாலா கடையைத் தேடி ஓடுவதை நிறுத்திவிட்டு, பதறாமல் அமர்ந்து வெற்றித்
தலைவரின் பதிலுரையை கேளும் ஓட்டநிதி’’ என்று கிண்டல் செய்கிறார்கள்.
திமுகவுக்கு சம்பவம் காத்திருக்கிறது.

