என்னுள் பாதி என் மனைவி துர்கா! மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காஞ்சீபுரத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கிவைத்தார். அப்போது நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின், மகளிர் முன்பு உரை நிகழ்த்தினார். அவர் பேசும் போது, என்னுடைய பாதி என சொல்லும் அளவுக்கு எனது மனைவி துர்கா உள்ளார். அரசியல் பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த துர்கா, திருமணமான 5வது மாதத்தில் […]
பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மரியாதை! காஞ்சீபுரத்தில் முதலமைச்சர்!

பேரிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சீபுரத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கோகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் உரிமைத் தொகைத் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். காஞ்சீபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில் அமைந்துள்ள […]
பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு உதயநிதி ஸ்டாலின் மரியாதை!

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு சார்பில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருடப்படம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு […]
வேறு நீதிபதிக்கு மாற்ற முடியாது! பொன்முடி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றும் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நிராகரித்து உத்தரவிட்டார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து மறுவிசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணை கடந்த 7ம் தேதி மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. […]
சனாதன தர்மம் குறித்து வாய் திறந்த பிரதமர் மோடி! மத்தியபிரதேசத்தில் நடந்தது என்ன?

மத்திய பிரதேசத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி சனாதன தர்மம் குறித்து உரை நிகழ்த்தியுள்ளார். இந்தியா முழுவதும் சனாதன தர்மம் குறித்து பல்வேறு கருத்துகளும், எதிர்ப்புகளும் ஆதரவுகளும் வலுத்து வருகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்த சனாதன தர்மம் குறித்த வாக்குவாதங்கள் இன்றளவும் பல்வேறு தரப்பினர் மத்தியில் பேச்சுப் பொருளாக மாறி வழக்குகளுக்கும் வழிவகுத்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு சனாதன […]
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை! பிரத்யேக ஏ.டி.எம். கார்டு அறிமுகம்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெறும் வகையில் அதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்.15ம் தேதி) காஞ்சீபுரத்தில் தொடங்கி வைக்கிறார். தேர்வு செய்யப்பட்ட மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான பிரத்யேக ஏ.டி.எம். கார்டுகளை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்த உள்ளார். சென்னையில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு 8,000 ஏ.டி.எம். கார்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த […]
ரூ.1000 கலைஞர் உரிமைத் தொகை கிடைக்கவில்லையா? இதை செய்யுங்கள்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெற முடியாமல் போன மகளிர் மேல்முறையீடு செய்வதற்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (15ம்தேதி) காஞ்சீபுரத்தில் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 1 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு தங்கள் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளது. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை அவர்கள் அளித்த கைப்பேசி எண்ணில் குறுஞ்செய்தியாக வருகிற 18ம் தேதி […]
4 மாவட்ட கலெக்டர்களுக்கு முதலமைச்சர் திடீர் ஆலோசனை! முக்கிய பின்னணி தகவல்கள்!

வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். வருகிற 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை மண்டல கள ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கப்பட்டு ஆகிய 4 மாவட்டங்களின் கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் மாவட்டங்கள் வாரியாக […]
சாதாரண சைக்கிள் கடை டூ கோடீஸ்வர எம்.எல்.ஏ தி-நகர் சத்யாவை வளைத்த லஞ்ச ஒழிப்பு துறை ! அதிர வைக்கும் சொத்துப்பட்டியல்

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீது நேற்று (செப்.12ம் தேதி) காவல் நிலையத்தில் மாலை 4 மணியளவில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 25 பக்கங்களைக் கொண்ட அந்த முதல் தகவல் அறிக்கையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா தனது மனைவி மற்றும் மகள் உள்ளிட்ட குடும்பத்தார் மீது வாங்கியுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்த அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அதில், கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.நகர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த […]
முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா ஆவணங்கள் சிக்கியதா? லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யாவின் வீடு, அலுவலகம், அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர் சத்ய நாராயணன் என்கிற தி.நகர் சத்யா. இவர் தன் சொத்து மதிப்பை மறைத்து குறைவாக காட்டி தி.நகர் தொகுதியில் போட்டியிட்டதாகவும், அதன் பின்னர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]

