ஆந்திராவில் 144 தடை உத்தரவு! சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர எல்லையில் பெரும் பதற்றம் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த 9ம் தேதி நந்தியாலா என்ற பகுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்று விட்டு இரவு நேரத்தில் தனது வாகனத்திலேயே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை சுமார் 3 மணியளவில் நந்தியாலா போலீஸ் டிஐஜி தலைமையிலான போலீசார் […]
ஊழலை மறைக்கவே இந்த நாடகம்! பா.ஜ.க. மீது உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நெய்வேலியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதிஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க 100 ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது தற்போது இந்தியாவின் மிகப்பெரிய பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 260க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இன்னும் இந்த பேச்சு ஓய்ந்த பாடில்லை. அதன்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், […]
அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டை தொடர்ந்து நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். 18வது ஜி20 மாநாடு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த பெருமை தற்போது இந்தியாவுக்கு சொந்தமாகியுள்ளது. யாரும் எதிர்பார்த்திராத அளவுக்கு ஜி20 மாநாட்டிற்கான அனைத்து வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டதால் ஜி20 மாநாடு இனிதே நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்த உறுப்பு நாடாக இணைக்கும் நிகழ்வு முத்தாய்ப்பாக அமைந்து பலரின் பாராட்டையும் பெற்றது. மாநாட்டின் […]
அடுத்த ஜி20 மாநாட்டின் பொறுப்பு பிரேசிலிடம் ஒப்படைப்பு!

18வது ஜி20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி முடித்ததை தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான மாநாட்டின் பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 18வது ஜி20 மாநாட்டு கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சர்வதேச தலைவர்கள் கலந்து கொண்டு இந்தியாவின் ஏற்பாடுகளை கண்டு வியப்படைந்தனர். ‘‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’’ என்ற கோட்பாட்டின் கீழ் நடத்தப்பட்ட ஜி20 மாநாடு சர்வதேச அளவில் இந்தியா மீதான கவனத்தை அதிகரித்துள்ளது. இம்மாநாட்டில் […]
இனி ‘இந்தியா’ இல்லை ‘பாரத்’ தான்! பிரதமர் மோடி செய்த காரியம்!

ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி தனது இருக்கையின் முன்பு இந்தியா என்ற பெயர் பலகைக்கு பதிலாக ‘பாரத்’ என்ற பெயர் பலகையை அடையாளப்படுத்தியுள்ளது தற்போது பெரும் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. ஒட்டுமொத்த உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஜி20 மாநாடு இன்றும் நாளையும் டெல்லியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறுகிறது. மாநாட்டை முன்னிட்டு உலகத் தலைவர்கள் அவரும் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் அனைவரும் தாங்கள் […]
சீமானுக்கு சம்மன் அனுப்பிய வளசரவாக்கம் போலீசார்! நடிகை விஜயலட்சுமி விவகாரம்!

நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பல ஆண்டுகளாக புகைந்து கொண்டிருக்கும் விஜயலட்சுமி& சீமான் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து காவல்நிலையத்தை நாடியுள்ளார். இதன் தொடர்ச்சியாக நடிகை விஜயலட்சுமி நேற்று மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்ட நிலையில் தற்போது நாம் தமிழர் […]
பனையூரில் விஜய் மக்கள் இயக்க மகளிர் அணியினர்! என்னதான் நடக்கிறது அங்கே?

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்த விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி பொறுப்பாளர்கள் பனையூரில் முகாமிட்டுள்ளனர். நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தற்போது அரசியல் விமர்சகர்களையும், திரையுலகினரையும் பல்வேறு வகையில் யோசிக்க வைத்துள்ளது. நடிகர் விஜய்யின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் கண்ணில் விளக்கெண்ணையை விட்டு ஆராய்ந்து வருகின்றன. நடிகர் விஜய் லியோ திரைப்படத்தின் பணியில் முழுவீச்சாக ஈடுபட்டு வந்தாலும், தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தி […]
98வது பிறந்தநாள் கொண்டாடும் ஆர்.எம்.வீரப்பன்! நேரில் வாழ்த்திய மு.க.ஸ்டாலின்!

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரான ஆர்.எம்.வீரப்பனின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். ஜி20 மாநாட்டை தொடர்ந்து நடைபெற உள்ள விருந்தில் பங்கேற்க குடியரசுத் தலைவர் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணமானார். அதற்கு முன்னதாக எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பனை அவரது இல்லத்தில் சென்று நேரில் சந்தித்தார். ஆர்.எம்.வீரப்பனின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் […]
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது! முக்கிய பின்னணி!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்-வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியில் இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு 118 கோடி ரூபாய் சட்டவிரோதமாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நந்தியாலா என்ற பகுதியில் நேற்று […]
செந்தில் பாலாஜி ஜாமீன் மனுதாக்கல் செய்ய அனுமதி!

ஜாமீன் மனு தாக்கல் செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை செசன்ஸ் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை கடந்த மாதம் ஆகஸ்டு 12ம் தேதி சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதன் பின்னர் இந்த வழக்கு […]

