அமலாக்கத்துறையின் அடுத்த செக்! முதலமைச்சர் மருமகனின் ஆடிட்டர்தான்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், மணல்குவாரி அதிபர்கள், தொழில் அதிபர்களின் வீடுகளிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் ஆடிட்டரான சண்முகராஜ் […]
வசூலில் புதிய சாதனை படைத்த ‘ஜவான்’ திரைப்படம்!

நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் வெளியான 5 நாட்களுக்குள் 525 கோடி ரூபாய் அளவுக்கு வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோலிவுட் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மெண்ட் வழங்க, கவுரி கான் தயாரிப்பில் கடந்த 7ம் தேதி வெளியான திரைப்படம் ஜவான். நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே ஜவான் படத்தில் தங்கள் நடிப்பு திறமையை வெளிக்காட்டியிருந்தனர். ஜவான் […]
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களுக்கு செக்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் தற்போது அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வருவது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மேற்கொண்டதாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14ம்தேதி கைது செய்யப்பட்டார். அவரது கைது சட்டப்படியானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக அமைச்சர் […]
இந்திய அணியிடம் 128 ரன்களுக்கு சுருண்டு விழுந்த பாகிஸ்தான் அணி!

ஆசியக் கோப்பை சூப்ப்ர4 போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய சாதனை புரிந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கிரிக்கெட் என்றாலே ரசிகர்கள் உற்சாகமடைந்து விடுவார்கள். அதிலும் இந்தியா& பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிகளைப் பற்றி சொல்லவா வேண்டும். எப்போது போட்டி தொடங்கும் என்றும் டிவி முன்பு குடும்பம் குடும்பமாக காத்துக் கொண்டிருக்கும் வழக்கம் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளையும் […]
ஸ்தம்பித்து போன பெங்களூர் நகரம்! பயணிகள் பரிதாப நிலை!

தனியார் போக்குவரத்து சங்க கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் இன்று பெங்களூரில் அனைத்து தனியார் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் தனியார் போக்குவரத்து சங்கத்தினர் 28 கோரிக்கைகளை முன்வைத்து ஆட்டோ ரிக்சாக்கள், பேருந்துகள் மற்றும் டாக்சிகள் உள்ளிட்ட 32 தனியார் போக்குவரத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்தோர் பந்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெங்களூர் நகரமே ஸ்தம்பித்துள்ளது. இதற்கிடையில் தனியார் நடத்தும் பந்த் காரணமாக கடும் சிரமத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை முன்னரே உணர்ந்த சில […]
ஆந்திராவில் 144 தடை உத்தரவு! சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர எல்லையில் பெரும் பதற்றம் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த 9ம் தேதி நந்தியாலா என்ற பகுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்று விட்டு இரவு நேரத்தில் தனது வாகனத்திலேயே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை சுமார் 3 மணியளவில் நந்தியாலா போலீஸ் டிஐஜி தலைமையிலான போலீசார் […]
அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டை தொடர்ந்து நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். 18வது ஜி20 மாநாடு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த பெருமை தற்போது இந்தியாவுக்கு சொந்தமாகியுள்ளது. யாரும் எதிர்பார்த்திராத அளவுக்கு ஜி20 மாநாட்டிற்கான அனைத்து வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டதால் ஜி20 மாநாடு இனிதே நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்த உறுப்பு நாடாக இணைக்கும் நிகழ்வு முத்தாய்ப்பாக அமைந்து பலரின் பாராட்டையும் பெற்றது. மாநாட்டின் […]
அடுத்த ஜி20 மாநாட்டின் பொறுப்பு பிரேசிலிடம் ஒப்படைப்பு!

18வது ஜி20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி முடித்ததை தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான மாநாட்டின் பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 18வது ஜி20 மாநாட்டு கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சர்வதேச தலைவர்கள் கலந்து கொண்டு இந்தியாவின் ஏற்பாடுகளை கண்டு வியப்படைந்தனர். ‘‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’’ என்ற கோட்பாட்டின் கீழ் நடத்தப்பட்ட ஜி20 மாநாடு சர்வதேச அளவில் இந்தியா மீதான கவனத்தை அதிகரித்துள்ளது. இம்மாநாட்டில் […]
இனி ‘இந்தியா’ இல்லை ‘பாரத்’ தான்! பிரதமர் மோடி செய்த காரியம்!

ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி தனது இருக்கையின் முன்பு இந்தியா என்ற பெயர் பலகைக்கு பதிலாக ‘பாரத்’ என்ற பெயர் பலகையை அடையாளப்படுத்தியுள்ளது தற்போது பெரும் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. ஒட்டுமொத்த உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஜி20 மாநாடு இன்றும் நாளையும் டெல்லியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறுகிறது. மாநாட்டை முன்னிட்டு உலகத் தலைவர்கள் அவரும் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் அனைவரும் தாங்கள் […]
ஜி20 மாநாடு: டெல்லியும் குவியும் சர்வதேச தலைவர்கள்!

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக, சர்வதேச தலைவர்கள் ஒவ்வொருவராக டெல்லிக்கு வருகைபுரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் கோலாகலமாகவும் உற்சாகமாகவும் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி டெல்லிக்கு வருகைபுரிந்துள்ள சர்வதேச தலைவர்கள் பின்வருமாறு- * ரஷிய அதிபர் புதின் ஜி20 மாநாட்டில் பங்கேற்காத நிலையில், அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லவ்ரோ டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். * டெல்லி விமான நிலையம் வந்தடைந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை மத்திய மந்திரி […]

