News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

சட்டசபையில் அவ்வப்போது 110 விதியின் கீழ் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை முதல்வர் விஜய் செய்துவருகிறார். அந்த வகையில் இன்றைய அறிவிப்பு நியாயமான காரணங்களுக்காக போராடி வழக்குகளை சந்தித்திருக்கும் ஆசிரியர் மற்றும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது.

இன்றைய அறிவிப்பில் முதல்வர் விஜய், ‘’ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு டிஜிட்டல் ஓட்டுநர் உரிமங்கள் (ஆர்.சி) அன்றைய தினமே வழங்கப்படும். இனிமேல் புதிய வாகனம் வாங்குவோர் டிஜிட்டல் ஆர்.சி -யை இணைய தளம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள் க்யூ.ஆர் கோடு -ஐ ஸ்கேன் செய்து மின்னணு முறையில் ஆவணங்களை சரிபார்க்க முடியும். இந்த முறையினால், ஆவணம் தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளவும், அச்சிட்டுக் கொள்ளவும் முடியும்.

கடந்த ஆட்சிக்காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் விவசாயின் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்தார். விதி 110-இன் கீழ், கடந்த 2021 மே முதல் 2026 ஏப்ரல் வரை, தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.

ஜனநாயக உரிமைகளை மதிக்கும் நமது அரசு, கடந்த ஆட்சியாளர்களால் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய போது அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும், அவர்களது நியாயமான கோரிக்கைக்களுக்கும் இவ்வரசு உறுதுணையாக நிற்கும் என்பது உறுதியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link