News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி தனது இருக்கையின் முன்பு இந்தியா என்ற பெயர் பலகைக்கு பதிலாக ‘பாரத்’ என்ற பெயர் பலகையை அடையாளப்படுத்தியுள்ளது தற்போது பெரும் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது.

 

ஒட்டுமொத்த உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஜி20 மாநாடு இன்றும் நாளையும் டெல்லியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறுகிறது. மாநாட்டை முன்னிட்டு உலகத் தலைவர்கள் அவரும் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

இன்று காலை ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் அனைவரும் தாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து புறப்பட்டு பாரத் மண்டபம் வந்தடைந்தனர். அவர்கள் அனைவரையும் பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் வரவேற்று மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் ஜி20 மாநாடு இனிதே தொடங்கியது.

 

இந்நிலையில் ஒவ்வொரு நாட்டின் தலைவரின் இருக்கையின் முன்பு மேஜையில் அவரவர் நாட்டின் பெயர் பலகை இடம்பெற்றிருந்தது. அதன்படி பிரதமர் மோடியின் முன்பு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில், ‘இந்தியா’ என்ற பெயருக்கு பதிலாக ‘பாரத்’ என்ற பெயர் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று பெயர் மாற்றுவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும், இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் உரிய விளக்கம் அளிக்காத நிலையிலும் இந்த பெயர் பலகை என்னவென்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link