Share via:
ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக, சர்வதேச தலைவர்கள் ஒவ்வொருவராக டெல்லிக்கு வருகைபுரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் கோலாகலமாகவும் உற்சாகமாகவும் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி டெல்லிக்கு வருகைபுரிந்துள்ள சர்வதேச தலைவர்கள் பின்வருமாறு-
* ரஷிய அதிபர் புதின் ஜி20 மாநாட்டில் பங்கேற்காத நிலையில், அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லவ்ரோ டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார்.
* டெல்லி விமான நிலையம் வந்தடைந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை மத்திய மந்திரி அஸ்வினிகுமார் சவுபே வரவேற்றார்.
* ஆப்பிரிக்க யூனியனின் தற்போதைய தலைவர் அசாலி அசோமானி டெல்லி வந்தடைந்தார்.
* இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு டெல்லிவிமான நிலையத்தில் கலாச்சார நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
* அடுத்த ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் மகத்தான பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் மாநாட்டின் இறுதி நாளில் பிரேசில் அதிபர் லூலாவிடம், இந்திய பிரதமர் மோடி ஒப்படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.