தமிழகத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி! மருத்துவத்துறை அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தகவல் வெளியிட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த வாரமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேசமயம் சளி, காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அதிர்ச்சி […]
சனாதன தர்மம் குறித்து வாய் திறந்த பிரதமர் மோடி! மத்தியபிரதேசத்தில் நடந்தது என்ன?

மத்திய பிரதேசத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி சனாதன தர்மம் குறித்து உரை நிகழ்த்தியுள்ளார். இந்தியா முழுவதும் சனாதன தர்மம் குறித்து பல்வேறு கருத்துகளும், எதிர்ப்புகளும் ஆதரவுகளும் வலுத்து வருகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்த சனாதன தர்மம் குறித்த வாக்குவாதங்கள் இன்றளவும் பல்வேறு தரப்பினர் மத்தியில் பேச்சுப் பொருளாக மாறி வழக்குகளுக்கும் வழிவகுத்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு சனாதன […]
கேரளாவில் அதிகரிக்கும் நிபா வைரஸ் காய்ச்சல்! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து அம்மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சல் தற்போது அண்டை மாநிலங்களையும் அச்சத்தில் ஆழத்தியுள்ளது. இதுவரை நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகியுள்ள நிலையில் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோழிக்கோடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலத்தை […]
காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை: 2 ராணுவ வீரர்கள், டி.எஸ்.பி. வீர மரணம்!

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ அதிகாரிகள் 2 பேர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர். ஜம்மு&காஷ்மீர் அனந்தநாத் மாவட்டத்தில் உள்ள கரோல் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை கூட்டாக இணைந்து கடந்த வாரம் (செப்.12 மற்றும் 13) தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதைத்தொடர்ந்து ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் டி.எஸ்.பி. […]
பாகிஸ்தான்- இலங்கை அணிகள் இன்று மோதல்! 39 ஆண்டு கால வரலாறு மாறுமா?

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியின் முடிவில் 39 ஆண்டு கால வரலாறு மாறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் தன்னுடன் போட்டியிட்ட பாகிஸ்தான், இலங்கை அணிகளை அடித்து துவம்சம் செய்த இந்திய அணி 9வது முறையாக இறுதிப் போட்டிக்குள் அதிரடியாக […]
சாதாரண சைக்கிள் கடை டூ கோடீஸ்வர எம்.எல்.ஏ தி-நகர் சத்யாவை வளைத்த லஞ்ச ஒழிப்பு துறை ! அதிர வைக்கும் சொத்துப்பட்டியல்

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீது நேற்று (செப்.12ம் தேதி) காவல் நிலையத்தில் மாலை 4 மணியளவில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 25 பக்கங்களைக் கொண்ட அந்த முதல் தகவல் அறிக்கையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா தனது மனைவி மற்றும் மகள் உள்ளிட்ட குடும்பத்தார் மீது வாங்கியுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்த அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அதில், கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.நகர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த […]
எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்! முக்கிய தகவல்கள்!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளநிலையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்ல உள்ளதாக கட்சித் தலைமையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டெல்லி செல்லும் அவர் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கிவே எடப்பாடி பழனிசாமியின் இந்த […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள்! குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

சென்னை உயர்நீதிமன்ற 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளில் காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் உச்சநீதிமன்ற கொலீஜியம் இறங்கியுள்ளது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் முடிவு செய்துள்ளது. இது குறித்து உச்சநீதிமன்ற கொலீஜியம் இணையத்தில் தீர்மானம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக […]
சனாதனத்திற்கு எதிராக பேசும் நாக்கை பிடுங்குவோம்! மத்திய மந்திரி ஆவேசம்!

சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கைப் பிடுங்கிவிடுவோம் என்று மத்திய அமைச்சர் அச்சுறுத்தும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு, கொரோனா போன்ற காய்ச்சல்களை போல ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த பேச்சுக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில் உச்சகட்டமாக அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் […]
சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை கைதி எண் கொடுக்கப்பட்டது!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த 9ம் தேதி அதிகாலை 6 மணிக்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 14 நாள் நீதிமன்ற காவல் என்று உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் முன்பாக தெலுங்கு தேசம் கட்சியினர் திரளாக திரண்டதால் கடந்த சில நாட்களாகவே ஆந்திர மாநிலம் […]

