Share via:
நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் வெளியான 5 நாட்களுக்குள் 525 கோடி ரூபாய் அளவுக்கு வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோலிவுட் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மெண்ட் வழங்க, கவுரி கான் தயாரிப்பில் கடந்த 7ம் தேதி வெளியான திரைப்படம் ஜவான். நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே ஜவான் படத்தில் தங்கள் நடிப்பு திறமையை வெளிக்காட்டியிருந்தனர்.
ஜவான் திரைப்படம் வெளியான 3வது நாளான கடந்த சனிக்கிழமையன்று ஒரே நாளில் 68.72 கோடி ரூபாயும், உலகளவில் 144.22 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. எந்த ஒரு இந்திய திரைப்படமும் இதற்கு முன்னர் இத்தகைய வசூல் சாதனையை நிகழ்த்தியது கிடையாது என்ற அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான படம் ஏற்கனவே 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில், தற்போது ஜவான் திரைப்படம் வெளியான ஒரு வாரத்திற்குள் 525 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்னும் ஒரு வாரத்தில் பதான் திரைப்படத்தின் மொத்த வசூலை ஜவான் திரைப்படம் முறியடிக்கும் என்ற பேச்சும் தற்போது எழுந்துள்ளது.
பாலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாக வெற்றிப் படங்கள் எதுவும் வெளியாகாமல் துவண்டு போயிருந்த நிலையில் தற்போது ஷாருக்கானின் பதான், ஜவான் திரைப்படங்கள் பாலிவுட் திரையுலகினரையும், ரசிகர்களையும் உற்சாகமடையச் செய்துள்ளது

