Share via:
தனியார் போக்குவரத்து சங்க கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் இன்று பெங்களூரில் அனைத்து தனியார் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் தனியார் போக்குவரத்து சங்கத்தினர் 28 கோரிக்கைகளை முன்வைத்து ஆட்டோ ரிக்சாக்கள், பேருந்துகள் மற்றும் டாக்சிகள் உள்ளிட்ட 32 தனியார் போக்குவரத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்தோர் பந்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பெங்களூர் நகரமே ஸ்தம்பித்துள்ளது. இதற்கிடையில் தனியார் நடத்தும் பந்த் காரணமாக கடும் சிரமத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை முன்னரே உணர்ந்த சில பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளது.
அதே சமயம் நிலைமையை சமாளிக்க மாநில அரசு போக்குவரத்து அமைப்பான பி.எம்.டி.சி. நகர பயணிகளுக்கு கூடுதல் பேருந்துகளை அனுப்ப திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
தாங்கள் வைத்த 28 அம்ச கோரிக்கைகளை கடந்த ஆகஸ்டு மாதம் நிறைவேற்றத் தவறியதால் இந்த பந்த்தை முன்னெடுத்துள்ளதாக தனியார் போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எப்போதும் பரபரப்பாக இயங்கும் பெங்களூர் நகரம் இன்று இயல்பை விட சற்று குறைவான அளவில் வாகனங்கள் இயங்குவதால் சிறிதளவு ஸ்தம்பித்துள்ளது. தனியாரின் இந்த பந்த் காரணமாக பல பயணிகள் கடும் சிரமத்தை அனுபவிப்பதாக வேதனையுடன் இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.