News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

லேடி வெலிங்க்டன் வழங்கிய சபாநாயகர் ஆசனத்தில் இன்று சத்யபாமாவை அமரவைத்து அழகு பார்த்திருக்கிறார் முதல்வர் விஜய். இது, தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் என்று மாற்றுக் கட்சியினரும் பாராட்டியுள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் மற்றும் பேரவை துணைத்தலைவர் ஆகியோர் அவையில் இல்லாத நேரத்தில் பேரவை நடவடிக்கைகளை தலைமைதாங்கி நடத்துவதற்கு தவெக எம்.எல்.ஏ. சத்யபாமா இன்று மாற்று சபாநாயகராக செயல்பட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகர் இருக்கையை ஒரு பெண் அலங்கரிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை சத்தியபாமா எம்.எல்.ஏ.வுக்கு முதல்வர் விஜய் வழங்கியிருக்கிறார். பெண்களின் திறமைக்கும் தலைமைத்துவத்திற்கும் சமமான வாய்ப்பை வழங்கும் முதல்வர் விஜய் தலைமையில், தமிழக அரசியலில் புதிய மாற்றம் தொடக்கம்,

மாற்று பேரவை தலைவராக அமர்ந்த சத்யபாமாவை திமுகவின் மாஜி அமைச்சர் தங்கம் தென்னரசு மனதாரப் பாராட்டியிருக்கிறார். சபாநாயகர் இருக்கையில் அவையை வழிநடத்திய முதல் பெண் சத்யபாமா என்ற வரலாற்று சாதனையை விஜய் படைத்திருக்கிறார்.

இதுதான் நிஜமான மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link