News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர எல்லையில் பெரும் பதற்றம் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த 9ம் தேதி நந்தியாலா என்ற பகுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்று விட்டு இரவு நேரத்தில் தனது வாகனத்திலேயே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அதிகாலை சுமார் 3 மணியளவில் நந்தியாலா போலீஸ் டிஐஜி தலைமையிலான போலீசார் சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய முயற்சி செய்த போது, அங்கு கூடியிருந்த தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் போலீசாரை தடுத்தனர்.

சந்திரபாபு நாயுடு ஏற்கனவே எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவின் பாதுகாப்பில் உள்ளதால் அவரை சட்டப்படி அதிகாலை 5.30 மணிவரை அவரை அழைத்து செல்ல முடியாது என்று எஸ்பிஜி படைப்பிரிவினரும் மறுப்பு தெரிவித்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட போலீசார், காலை 6 மணிவரை காத்திருந்து அதன் பின்னர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்து விஜயவாடாவுக்கு அழைத்து சென்றனர்.

இதைத்தொட்ரந்து ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கொட்டும் மழைக்கு நடுவே சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையறிந்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜயவாடா நீதிமன்றம் முன்பு கூடியதால் அங்கு பதற்றம் நிலவியது.

எல்லையில் தொடரும் பதற்ற நிலை காரணமாக பேருந்து உள்ளிட்ட போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முழு அடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியினர் மேற்கொண்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக குப்பம் உள்ளிட்ட சில பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

தமிழக& ஆந்திர பகுதி மாவட்டங்களான திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரியிலும் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக ஆந்திராவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று ஆந்திர மாநிலும் முழுவதும் பந்த் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் ஆங்காங்கே ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link