தயாநிதி மாறனுக்கு திடீர் சிக்கல்..? மத்திய சென்னை நிலவரம்

மத்திய சென்னையில் வழக்கம்போல் தி.மு.க. வேட்பாளராக மாறன் நினைக்கிறார். இங்கு அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் பார்த்தசாரதி நிற்கிறார். இவர்கள் இருவரையும் விட பா.ஜ.க.வின் வேட்பாளர் வினோஜ் செல்வமே எகிறி எகிறி அடிக்கிறார். தயாநிதி மாறனுக்கு ஏதேனும் ஒரு வகையில் சிக்கல் உருவாக்கி தேர்தலை தள்ளிப்போட பா.ஜ.க. முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தொகுதியில் முரசொலி மாறன் 1996, 1998, 1999 ஆகிய 3 தேர்தல்களில் நின்று வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் தயாநிதி மாறன் 204, 2009 தேர்தல்களில் […]
சீமான் சின்னத்துக்கு விஜய் ஆதரவா? குஷியில் தம்பிகள்

கடந்த தேர்தலில் விஜய் சைக்கிள் ஓட்டிக்கொண்டு ஓட்டு போடுவதற்கு வந்ததை பார்த்த ரசிகர்கள், ‘பெட்ரோல் விலை ஏறுனதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிற மாதிரி சைக்கிள்ல வந்திருக்கிறார், அதனால் இது தி.மு.க. ஆதரவு நிலைப்பாடு’ என்று குதித்தார்கள். அதே ரசிகர்கள் இப்போது நாம் தமிழரின் புதிய சின்னமான ஒலிவாங்கிக்கு விஜய் ஆதரவு கொடுத்துவிட்டார் என்று சொல்கிறார்கள். அதை கேட்டு நாம் தமிழர் சீமானின் அன்புத் தம்பிகள் அத்தனை பேரும் ஆனந்தத்தில் இருக்கிறார்கள். விஜய்யின் புதிய படமான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் […]
அண்ணாமலைக்கு ரூல்ஸ் கிடையாதா… இரவு 10 மணி பஞ்சாயத்து

கோவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிடும் அண்ணாமலை காமாட்சிபுரத்தில் பிரச்சாரத்தை முடித்து விட்டு திருச்சி சாலைக்கு வந்த போது இரவு 10 மணியை கடந்திருந்தது. அதன் பிறகும் எனக்காக காத்திருக்கும் மக்களை சந்திக்கப் போகிறேன் என்று அடம் பிடித்து நடுரோட்டில் பிரச்னை செய்திருக்கிறார் அண்ணாமலை. இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ய கூடாது என்ற விதியை மீறி அண்ணாமலை பிரச்சார வாகனத்தில் கையசைத்தவாறு பயணித்தார். தேர்தல் விதியை மீறியும் அனுமதி பெறாமல் நூதன முறையிலும் அவர் […]
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்… பெட்ரோல் விலை உயரும்… மூன்றாம் உலகப்போர் ஆபத்து

அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கையை மீறி ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் தொடங்கினால் மூன்றாவது உலகப் போர் தொடங்கவும், உலகெங்கும் பெட்ரோல் போன்ற எரிபொருள் கிடைப்பதற்கு சிக்கலும் உருவாகும் என்று தெரியவந்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் காரணமாக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒருசேர குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. இந்த போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள Al-Ahly Baptist என்ற மருத்துவமனை மீது ராக்கெட் […]
அண்ணாமலையின் 100 தேர்தல் வாக்குறுதி… மச்சானுக்கு சேம்பர் நிறுவனம்… பா.ம.க.வுக்கு ஆப்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கான 100 தேர்தல் வாக்குறுதிகளை அண்ணாமலை வெளியிட்டார். இந்த 100 வாக்குறுதிகளையும் அடுத்த 500 நாட்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்று கூறியிருக்கிறார். கோவை விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்தப்படும். கோவை மெட்ரோ திட்டம் விரைவுபடுத்தப்படும். தமிழகத்தின் இரண்டாவது இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (IIM), கோவையில் நிறுவப்படும். விவசாய மக்களின் சுமார் எழுபதாண்டு கால கோரிக்கையான, ஆனைமலை – நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும். […]
பண மோசடி வழக்கு: ஹர்திக் பாண்ட்யா சகோதரர் கைது!

பண மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது ஐ.பி.எல். தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகளில் ராஜஸ்தான் அணி முதல் இடத்திலும், 2வது இடத்தில் கொல்கத்தாவும், 3வது இடத்தில் லக்னோ மற்றும் 4வது இடத்தில் சென்னை அணிகள் இடம்பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் கடைசி அணியாக (8வது) மும்பை இடம்பெற்றுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. இந்நிலையில் […]
பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதன் யாதவ் இந்துக்கள் பணத்தை சுருட்டிட்டாரா..? ஆட்டம் காணும் மயிலாப்பூர் நிதி நிறுவனம்

கண்ட கண்ட நிதி நிறுவனங்களிலும் பணத்தை முதலீடு செய்யாதீர்கள் என்று எத்தனை எடுத்துச்சொன்னாலும் மக்கள் கேட்பதே இல்லை. வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்துவிட்டு பின்னர் லபோதிபோவென வயிற்றில் அடித்துக்கொள்கிறார்கள். அப்படியொரு சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறது, தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் என்ற நிதி நிறுவனம். இந்த நிதி நிறுவன பணத்தை தேர்தல் செலவுக்காக பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதன் யாதவ் சுருட்டிவிட்டார் என்று பரபரப்பு கிளம்பியிருக்கிறது. சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு […]
அமைச்சர் துரைமுருகன் மகனுக்கு மீண்டும் சிக்கல்… வேலூர் தேர்தல் தள்ளிப் போகுமா..?

மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வினரே அதிருப்தி அடைந்திருக்கும் ஒரு வேட்பாளர் என்றால், அவர் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மட்டும்தான். அப்பாவின் செல்வாக்கில் காய் நகர்த்தி சீட் வாங்கிவிட்டு மக்களை கண்டுகொள்ளவே செய்யாதவர். கடந்த தேர்தலில் இவரது வேலூர் தொகுதியில் எக்கச்சக்கமாக பணம் புரண்டோடியதால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு தனியாக நடத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த தேர்தலிலும் அப்படியொரு சூழல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், மீண்டும் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர் வீட்டில் […]
தி.மு.க.வின் சிற்றரசு, இயக்குனர் அமீர் வீடுகளில் ரெய்டு.! உதயநிதிக்கு குறி வைக்கிறதா அமலாக்கத்துறை..?

மக்களவைத் தேர்தல் நேரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியே இருக்கக்கூடாது என்று திட்டமிட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை மீது தி.மு.க.வினர் குற்றம் சாட்டிவரும் நிலையில், இன்று சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிற்றரசு மற்றும் இயக்குனர் அமீர் உள்ளிட்ட பலர் இடங்களில் ரெய்டு நடைபெறுகிறது. இது பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்யும் உதயநிதிக்கு சிக்கல் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. டெல்லியில் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் மத்திய […]
பணீந்தர ரெட்டிக்கு பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பணத்தில் ஸ்பெஷல் கவனிப்பு..? கிடுகிடு குற்றச்சாட்டு

பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயிலில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த முறைகேடு இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்த கோயில் பணமான 6,648 ரூபாயை செயல் அலுவலர் ரவிச்சந்திரன் கொள்ளை அடித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 5.2.2020 அன்று தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதனை அறநிலையத் துறை ஆணையராக இருந்த பணீந்தர ரெட்டி பார்வையிட சென்னையிலிருந்து தஞ்சைக்கு வந்திருக்கிறார். அவருக்கு நாடியம்மன் கோவில் பணம் 6,648 ரூபாயை செலவு செய்ததாக நாடியம்மன் கோயில் செயல் அலுவலர் […]

