News

Follow Us

மக்களவைத் தேர்தல் நேரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியே இருக்கக்கூடாது என்று திட்டமிட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை மீது தி.மு.க.வினர் குற்றம் சாட்டிவரும் நிலையில், இன்று சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிற்றரசு மற்றும் இயக்குனர் அமீர் உள்ளிட்ட பலர் இடங்களில் ரெய்டு நடைபெறுகிறது. இது பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்யும் உதயநிதிக்கு சிக்கல் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

டெல்லியில் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் மத்திய  போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டதில், இதற்கு மூளையாக செயல்பட்டது தமிழ் மொழி திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கடந்த மாதம் 9-ம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போதைப் பொருள் வழக்கில் தற்போது அமலாக்கத் துறையும் களமிறங்கி உள்ளது. ஜாபர் சாதிக் வீடு அவர் தொடர்புடைய இடங்கள், அவரது கூட்டாளிகளின் வீடு, அலுவலகங்களிலும் இன்று காலை முதல்   அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதோடு ஜாபர் சாதிக் உடன் நெருக்கிய தொடர்பில் இருந்து இயக்குநர் அமீரின் அலுவகலத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. தியாகராய நகர்,  ராஜன் தெருவில் உள்ள அமீர் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.  

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உடன் இணைந்து அமீர், இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தை தயாரித்து வந்தனர். அதோடு இருவரும் சேர்ந்து ஓட்டல் ஒன்றை நடத்தி வந்தனர். முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2ம் தேதி அமீர் டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவகத்தில் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.  

மேலும், மயிலாப்பூர் சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜாபர் சாதிக்கும் தி.மு.க.வுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை நிரூபிக்கும் வகையில் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலர் சிற்றரசு வீட்டிலும் ரெய்டு நடக்கிறது. இவர் உதயநிதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், இந்த சிக்கல் அடுத்து உதயநிதிக்கும் வரும் என்கிறார்கள்.

ஜாபர் சாதிக்கு நேரடியாக சொந்தமாக இருக்க கூடிய புரசைவாக்கத்தில் உள்ள ஜெ.எஸ்.எம், புகாரி ஓட்டலில் சோதனை நடைபெறுகிறது. தொடர்ந்து சென்னை கொடுங்கையூரில் உள்ள ரகு என்பவரின் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. . ரகு என்பவர் ஜாக்கி என்னும் திரைப்படத்திற்கு அக்கவுண்டென்ஸ் வேலை பார்த்து வருவதாக தகவல். கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் ரோட்டில் உள்ள ஷேக் முகமது நிசார் என்பவரது வீட்டில் சோதனை நடைபெறுகிறது. 
புகாரி ஓட்டல் உரிமையாளரின் நீலாங்கரை வீட்டிலும் சோதனை எனத் தகவல் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இயக்குனர் அமீரும் சிற்றரசும் கைது செய்யப்பட்டால் அடுத்த நெருக்கடி உதயநிதிக்குத் தான்.; 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link