News

Follow Us

அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கையை மீறி ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் தொடங்கினால் மூன்றாவது உலகப் போர் தொடங்கவும், உலகெங்கும் பெட்ரோல் போன்ற எரிபொருள் கிடைப்பதற்கு சிக்கலும் உருவாகும் என்று தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் காரணமாக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒருசேர குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.  இந்த போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள Al-Ahly Baptist என்ற மருத்துவமனை மீது ராக்கெட் வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. விமான ரெய்டில் அவர்கள் ராக்கெட்டை ஏவி உள்ளனர். இதில்தான் மருத்துவமனை தாக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 800 பேர் வரை பலியாகினர்.

இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகள் ஒன்று சேர தொடங்கி உள்ளன. சன்னி – ஷியா மோதல் காரணமாக பிரிந்து இருந்த சவுதி – ஈரான் கூட இஸ்ரேலை இந்த விவகாரத்தில் ஒன்றாக கண்டிக்க தொடங்கி உள்ளன. இஸ்ரேல் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்தது. அதன்படியே தற்போது இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடக்கத் தொடங்கியுள்ளது.

இஸ்ரேலின் இந்த தாக்குதல் மிக தவறானது.. மனித தன்மையற்றது.. இஸ்ரேலை உலக நாடுகள் ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என்று சவுதி தெரிவித்துள்ளது . பரம வைரிகளான ஈரான் – சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக சமீபத்தில்தான் அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது இஸ்ரேல் விவகாரத்தில் இந்த நாடுகள் ஒன்றாக சேர்ந்து உள்ளன. பல இஸ்லாமிய நாடுகளை இது ஒரு குடையின் கீழ் கொண்டு வந்துள்ளது. சவுதி – இஸ்ரேல் இடையே பொருளாதார ஒப்பந்தம் நடக்கப்பட இருந்தது. இதை மத்திய கிழக்கு நாடுகள் எகிப்து, ஈரான் போன்றவை விரும்பவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு இடையே தற்போது இஸ்லாமியர்களின் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்கி வருகிறது.

சவுதி அரேபியா இந்த விவகாரத்தில் தற்போது இஸ்ரேலை ஆதரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த மோதல் காரணமாக பாலஸ்தீனத்தை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. அதன்படியே இஸ்ரேலை ஆதரிக்காமல் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாக சவுதி அரேபியா அறிவித்து உள்ளது.

இந்தியு நேரப்படி நேற்று இரவு இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். சிரியாவில் தங்களுடைய தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி என ஈரான் தெரிவித்து இருந்தாலும் பால்ஸ்தீன போர் தொடங்கி பல விஷயங்கள் இந்த மோதலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

200 ஏவுகணைகளை டிரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் மீது ஈரான் ஏவி உள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்ட ஈரானிய ஆளில்லா விமானங்கள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் இன்னும் இஸ்ரேலை அடையவில்லை. விரைவில் அவை இஸ்ரேல் மீது சென்று தாக்குதலை ஏற்படுத்தும். சில ஏவுகணைகள் தற்போதைக்கு இஸ்ரேலின் ராணுவ தளவாடங்களை தாக்கி லேசான சேதங்களை ஏற்படுத்தி உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர்தான் இந்த ஈரான் தாக்குதலுக்கு காரணம். பாலஸ்தீனத்தை இஸ்ரேல் விடாமல் தாக்கி வந்தது ஈரான் விரும்பவில்லை. இந்த போர் பாலஸ்தீனத்திற்கு ஈரான் மறைமுகமாக உதவி வந்தது. இப்போது நேரடியாக இது இஸ்ரேல் – பாலஸ்தீனம் போராக மாறி உள்ளது.,

கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யா, இஸ்ரேல் – பாலஸ்தீன போர் போர் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது. இவை முழுமுதற் போராக மாறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஒரு முழுமையான உலகப் போரின் முதன்மையான ஆபத்து பற்றி கேட்டால் அமெரிக்காவும் ரஷ்யாவும் சீனாவும் நேரடி மோதலில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறு உண்டு. இந்த இரண்டு இரண்டு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டால் கண்டிப்பாக இது உலகப்போராக மாறும்

சில மாதம் முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் சிரியா வடக்கு நகரமான அலெப்போவில் உள்ள விமான நிலையங்கள் மீது நேரத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. அங்கு உள்ள ஓடுபாதைகளை சேதப்படுத்தியதாகவும், இரண்டு குடியிருப்புகள் அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியது.

சிரியாவின் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுக்கவில்லை. ஏற்கவும் இல்லை. ஏகப்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் மாறி மாறி சிரியா மீது ஏவியதாக கூறப்படுகிறது. சிரியாவில் ஹெஸ்புல்லா படையினர் உள்ளனர். இவர்கள் ஈரான் ஆதரவு போராளிகள். இவர்கள்தான் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் படைக்கு உதவி செய்வதாக கூறப்பட்டது. இவர்களின் ஆதரவின் பெயரிலேயே ஹமாஸ் படைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில்தான் சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.

இப்படி சிரியா, லெபனான் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகளை உள்ளே கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தீவிரமாக முயன்று வருகிறார்.

ஈரான் போருக்கு உள்ளே வந்துள்ள நிலையில்,,. வேறு வழியின்றி கட்டாயத்தின் பெயரில் அமெரிக்காவும் போருக்குள் வரும். இப்படி அமெரிக்காவை போருக்குள் வந்தால் அது கண்டிப்பாக மூன்றாம் உலகப்போருக்கு வழிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதன் முதல் அபாயமாக உலகமெங்கும் பெட்ரோ உள்ளிட்ட எரிபொருள் விலை உயரத் தொடங்கும். இது அரபு நாடுகளுக்கு ஆபத்து இல்லை என்றாலும் வளர்ந்து வரும் அத்தனை நாடுகளுக்கும் சிக்கலாக மாறும்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link