News

சீமான் மானம் காற்றில் பறக்குது. மீண்டும் விஜயலட்சுமி ருத்ரதாண்டவம்.

Follow Us

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கான 100 தேர்தல் வாக்குறுதிகளை அண்ணாமலை வெளியிட்டார். இந்த 100 வாக்குறுதிகளையும் அடுத்த 500 நாட்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்று கூறியிருக்கிறார்.

கோவை விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்தப்படும். கோவை மெட்ரோ திட்டம் விரைவுபடுத்தப்படும். தமிழகத்தின் இரண்டாவது இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (IIM), கோவையில் நிறுவப்படும். விவசாய மக்களின் சுமார் எழுபதாண்டு கால கோரிக்கையான, ஆனைமலை – நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும். கோவையின் ஜீவநதியான நொய்யல் மற்றும் அதன் கிளை நதியான கௌசிகா நதிகள் மீட்டெடுக்கப்பட்டு, கோவையின் நீர்வளம் மேம்படுத்தப்படும். விசைத்தறி உரிமையாளர்கள் பலனடையும் வண்ணம், பவர்டெக்ஸ் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம், சூரிய ஒளி மின் தகடுகள் மற்றும் நாடா இல்லாத விசைத்தறிகள் அமைக்க மானியம் வழங்கப்படும். கோவையில், தேசிய பாதுகாப்பு முகமை (NIA) மற்றும், போதைப் பொருள் தடுப்பு பிரிவு (NCB) ஆகியவற்றின் கிளை அலுவலகங்கள் அமைக்கப்படும். நாடு முழுவதும் உள்ள புராதனமான ஆன்மீகத் தலங்களுக்கு, கோவையில் இருந்து 10 ரயில்கள் இயக்கப்படும் என்றெல்லாம் அறிக்கை கொடுத்துவரும் நேரத்தில் கோவை பா.ம.க. வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்துள்ளது.

அதாவது, கோவை மக்களவைத் தொகுதியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை போட்டியிடும் நிலையில், வேட்புமனு தாக்கல், தேர்தல் அலுவலகம் திறப்பு என எதற்குமே பா.ம.க-வை அழைக்கவில்லை என்றும், கூட்டணி தர்மம் முக்கியம்தான், ஆனால், அதைவிட சுயமரியாதை முக்கியம் என்றும், கோவை பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் கூட்டணி தலைவர்களை மதிப்பதில்லை என கோவை ராஜ் தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்.

 

இது போதாதென்று, அரவக்குறிச்சி தேர்தலில் அண்ணாமலை வசூலித்த ஊழல் பணம் அண்ணாமலையார் சேம்பர் நிறுவனமாக மாறியிருக்கிறது என்று சவுக்கு சங்கர் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார்.

அரவக்குறிச்சியில் போட்டியிடுவதற்கு அண்ணாமலைக்குக் கொடுத்த பணத்தை  முழுவதுமாக செலவு செய்யாமல் முதலீடாக மாற்ற திட்டமிட்டு அதனை தனது சொந்த சகோதரியின் கணவர் சிவக்குமாரிடம் கொடுத்துள்ளார். ஏற்கனவே கரூரில் குவாரி நடத்தி வரும் சிவக்குமார் அடிச்சது லக்கி பிரைஸ் என்று அந்த வசூல் பணத்தில் தேர்தல் முடிந்த ஓராண்டுக்குள் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அமரபூண்டி – புளியம்பட்டி கிராமத்தில் மச்சான் பெயரிலேயே *அண்ணாமலையார் சேம்பர்* என்ற‌ பெயரில் மிகப்பெரிய செங்கல் நிறுவனத்தை அமைத்துள்ளார். இதற்காக 24 ஏக்கர் நிலத்தை அமரபூண்டி -புளியம்பட்டி கிராமத்தில் (சர்வே நம்பர் 169/B, 20/1A2, 20/1B2 மற்றும் 168) திண்டுக்கல் சத்திரப்பட்டி செந்தில்குமார் உடன் சேர்ந்து பல கோடியை முதலீடு செய்து சிவக்குமார் வாங்கியுள்ளார்.

இந்த இடத்தில் பெரிய அளவில் செங்கல் சேம்பர், உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி, மின் வசதி, அலுவலகம், பணியாளர் அறை என இதுவரை பல கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10 லட்சம் யூனிட் மண் வாங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதிலும் மச்சான் சேம்பருக்கு விலை குறைத்து மண் இறக்க வேண்டும் என்று மணல் கரிகாலனை மிரட்டி அண்ணாமலை வாங்கி உள்ளதாகவும் தெரிகிறது. எம்பி, எம்எல்ஏ , கவுன்சிலர் என எந்த பதவியும் இல்லாத போது இப்படி கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அண்ணாமலைக்கு பொறுப்பு கிடைத்தால் என்ன ஆகும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

திரும்புற பக்கமெல்லாம் அடிக்கிறாங்களேப்பா…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link