News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

நெல்லையில் தேர்தல் நிறுத்தம்..? நயினார் நாகேந்திரனுக்கு அண்ணாமலை ஆப்பு?

நெல்லை தொகுதியை சரத்குமாருக்குத் தரவேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் கணக்காக இருந்தது. ஆனால், மத்திய அமைச்சர் கனவில் இருந்த நயினார் நாகேந்திரன் இதனை முறியடிக்கும் வேலையில் இறங்கினார். எனவே, கட்சி அறிவிக்கும் முன்னரே தானே தேர்தல் பிரசாரத்தை தொடங்கியே விட்டார் நயினார் நாகேந்திரன். ‘அண்ணா, இன்னும் வேட்பாளர் பரிசீலனை நடக்கவே இல்லை, அதற்குள் நீங்களே கட்சிக் கட்டுப்பாட்டை மீறலாமா?’ என்று அண்ணாமலை கேள்வி கேட்ட நேரத்தில், ‘நீங்க எதுக்காக இப்படி கேட்குறீங்கன்னு தெரியும், நான் இந்த தொகுதியை […]

நடிகர் விஜய்க்கு டென்ஷன் தந்த அறிக்கைக்குக் காரணம் இந்த கட்சிக்காரங்களா..?

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று நடிகர் விஜய் ஏற்கெனவே தெளிவாக அறிக்கை கொடுத்திருக்கும் நிலையில் திடீரென, ‘திராவிட கட்சிகளுக்கு ஓட்டுப் போட வேண்டாம்’ நடிகர் விஜய் கட்சியின் பெயரில் திடீரென ஒரு அறிக்கை இணையத்தில் வைரலாக வலம் வந்தது. இதனை உண்மை என்று நம்பி நிறைய விஜய் ரசிகர்கள் இதை சுற்றுக்கு விடத் தொடங்கினார்கள். அதேநேரம், ஒருசிலர் மட்டும் சந்தேகத்துடன் தலைமையைத் தொடர்புகொண்டார்கள். இதையடுத்தே ‘தமிழக வெற்றிக் கழகம்’ பெயரில் போலியாக […]

கணேசமூர்த்தியை வைகோவும் ஸ்டாலினும் படுகொலை செஞ்சிட்டாங்க… குமரி அனந்தனின் மகள் தமிழிசையின் வாரிசு குற்றச்சாட்டு

தெலுங்கானா, புதுவை கவர்னராக இருந்த தமிழிசை செளந்தர்ராஜன் இப்போது தென் சென்னை பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு வருகிறார். அவர் ஈரோடு ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி குறித்து வெளியிட்ட விமர்சனம் கடும் சர்ச்சையாகி வருகிறது. அவர் பேசுகையில், ‘பிரதமர் மோடி தொடர்ந்து வாரிசு அரசியலின் கொடுமையை விளக்கி வருகிறார். அந்த வாரிசு அரசியலுக்கு கணேசமூர்த்தி பலியாகி இருக்கிறார். அவரை படுகொலை செய்திருக்கிறார்கள். அந்த படுகொலைக்கு வைகோவும், ஸ்டாலினும் பொறுப்பேற்க வேண்டும் என்று கடும் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். அதோடு, ‘வாரிசு […]

கணேசமூர்த்தி மரணத்தால் தி.மு.க. கூட்டணி வெற்றிக்கு சிக்கலோ சிக்கல்

இந்த தேர்தலிலும் தனக்கு நிச்சயம் சீட் உண்டு என்ற நம்பிக்கையுடன் இருந்தவர் ஈரோட்டை சேர்ந்த ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி. இந்த முறை துரை வைகோ போட்டியிட வேண்டும் என்று அவரிடம் வைகோ சொன்ன நேரத்தில், ‘அப்படியென்றால் இரண்டு சீட் கேளுங்கள்’ என்று கூறியிருக்கிறார். ஆனால், ஒரே ஒரு சீட் அதுவும் துரை வைகோவுக்கு மட்டும் என்றதுமே கணேசமூர்த்தி மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறார். தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்று கடந்த 24-ம் தேதியன்று ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]

அரவிந்த் கெஜ்ரிவால் பாணியில் ஆ.ராசா, கனிமொழி கைது..?

மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்று கைது செய்தனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறையை ஏவி கெஜ்ரிவாலை பாஜக கைது செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கையை தொடர்ந்து பாஜகவுக்கு […]

போலி சாமியார் ஜக்கி வாசுதேவுக்கு மட்டும் அப்பல்லோ அலோபதி…. ஈஷா சீடர்களுக்கு ஆயுர்வேதமா..?

அதனை நம்பக்கூடாது என்று மக்களுக்குப் பாடம் எடுத்த ஜக்கி வாசுதேவ், தனக்கு ஒரு பிரச்னை என்றதும் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார். ஜக்கியின் பேச்சைக் கேட்டாலே பரவசமாக இருக்கும். பாதரசம் உண்பது, பாம்பு விஷம் குடிப்பது, போலி மருத்துவத்தை பரப்புவது, ஆயுர்வேதாவும், சித்தாவும் மட்டுமே சரியாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். தனக்கு ஒரு பிரச்னை என்றதும் அப்பல்லோ மருத்துவமனையில் போய் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.  மூளையில் ரத்த கசிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை […]

மீண்டும் அமலாக்கத்துறை ரெய்டு… விஜயபாஸ்கர், ஜி ஸ்கொயர் பாலா சிக்குவார்களா..?

தேர்தல் காலத்தில் அமலாக்கத்துறை அமைதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரே நேரத்தில் அ.தி.மு.க.வையும் தி.மு.க.வையும் குறி வைக்கும் வகையில் இன்று ரெய்டு ஆரம்பமாகியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக 7 ஆண்டுகளுக்கும் மேல் பதவி வகித்தவர் சி.விஜயபாஸ்கர். தற்போது விராலிமலை சட்டமன்ற உறுப்பினராகவும், புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். சமீபகாலமாக கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் பங்கெடுக்காமல அமைதியாகவே இருந்துவருகிறார். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள சி.விஜயபாஸ்கர் வீட்டில் […]

ஏழு நாளில் 60 கஞ்சா கிரிமினல்கள் கைது… காவல் ஆணையாளர் உத்தரவில் தொடர்கிறது அதிரடி வேட்டை

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்வதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், ‘போதை தடுப்புக்கான நடவடிக்கை’ மூலம் சிறப்பு சோதனைகள் மேர்கொள்வதற்கு உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில் துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில் உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு நடத்தி […]

பா.ஜ.க. கூட்டணியால் ராமதாஸ்க்கு ஆறு வழியில் அமோக லாபமா..? வன்னியர்களுக்கு ராமதாஸ் மோசடியை அம்பலப்படுத்தும் சி.ஆர்.ராஜன்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக பா.ம.க. அறிவிப்பு செய்திருக்கிறது. இது முழுக்க முழுக்க ராமதாஸின் சுயநல முடிவு என்றும் இதன் மூலம் வன்னியர் உள் ஒதுக்கீட்டு ஆபத்து என்றும் எச்சரிக்கை பதிவு வெளியிட்டிருக்கிறார் வன்னியர் சத்தியர் சாம்ராயத்தின் தலைவரான சிஆர்.ராஜன். அவரது பதிவில், ‘டாக்டர்.ச.இராமதாஸ் அவர்கள் .வன்னியர் 10.5% யை அழித்த வன்னிய விரோதிகள் உள்ள பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து உள்ளார். வன்னியர் 10.5% க்கு எதிராக குரல் […]

பிரதமர் மோடியின் கோவை ரோடு ஷோவில் பள்ளி மாணவிகள்… குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி சர்ச்சை

பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ பிரமாண்ட வெற்றி என்று அண்ணாமலை தரப்பும் படு தோல்வி என்று தி.மு.க. தரப்பும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர் குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதும், பள்ளி மாணவிகள் கட்டாயமாக கலந்துகொள்ள வைத்ததும் சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. இதுகுறித்து தி.மு.க.வின் ராஜிவ்காந்தி, ‘கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான டெம்போ டிராவலர் வண்டிகளை அரைநாள் வாடகை 5500 ரூபாய் என பேசி முன்பதிவு செய்து இருந்தனர்! ஒரு நபருக்கு 300 ரூபாய் என […]