News

Follow Us

மத்திய சென்னையில் வழக்கம்போல் தி.மு.க. வேட்பாளராக மாறன் நினைக்கிறார். இங்கு அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் பார்த்தசாரதி நிற்கிறார். இவர்கள் இருவரையும் விட பா.ஜ.க.வின் வேட்பாளர் வினோஜ் செல்வமே எகிறி எகிறி அடிக்கிறார். தயாநிதி மாறனுக்கு ஏதேனும் ஒரு வகையில் சிக்கல் உருவாக்கி தேர்தலை தள்ளிப்போட பா.ஜ.க. முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த தொகுதியில் முரசொலி மாறன் 1996, 1998, 1999 ஆகிய 3 தேர்தல்களில் நின்று வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் தயாநிதி மாறன் 204, 2009 தேர்தல்களில் வென்று 2014 தேர்தலில் தோற்றார். அடுத்த 2019 தேர்தலில் வென்று தற்போது நான்காவது முறையாக களத்தில் நிற்கிறார்.

2019 தேர்தலில் பா.ம.க சார்பில் நிறுத்தப்பட்ட சாம் பவுலை சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தயாநிதி மாறன் வென்றார். மக்கள் நீதி மய்யம் சார்பில் நின்ற கமீலா நாசர் 92 ஆயிரம் வாக்குகளும் நாம் தமிழர் வேட்பாளர் 30 ஆயிரம் வாக்குகளும் பெற்றனர். எல்லோருமே டெபாசிட் பறி கொடுத்தனர்.

இது தி.மு.க.வின் கோட்டை. என்றே சொல்லலாம். ஏனென்றால் இந்த தொகுதிக்குள் வரும் வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, அண்ணாநகர், ஆயிரம் விளக்கு ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க.வினரே எம்.எல்.ஏ.க்களாக இருக்கிறார்கள். அதோடு இஸ்லாமிய வாக்குகள் இந்த தொகுதியில் அதிகம். 

தே.மு.தி.க. வேட்பாளர் நிலைமை பரிதாபமாகவே உள்ளது. அ.தி.மு.அவின் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், பா.வளர்மதி, ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் தே.மு.தி.க.வுக்கு வாக்கு சேகரிப்பில் இது வரை பெரிதாக அக்கறை காட்டவில்லை. வேட்பாளர் பார்த்தசாரதி பணம் செலவழிக்க மாட்டார். அ.தி.மு.க.வினரும் இவருக்காக பணம் கொடுக்கப்போவதில்லை. எனவே இந்த தொகுதியிலுள்ள அ.தி.மு.க. வாக்குகள் தே.மு.தி.க.வுக்கு மாறும் எந்த வகையில் மாஜி அமைச்சர்கள் களப்பணியில் இறங்கவில்லை

மார்வாடிகள், வெளி மாநிலத்தவர்கள் அதிகம் நிரம்பியிருக்கிறார்கள் என்பது மட்டுமே வினோஜ் செல்வத்துக்கு ஆறுதலான ஒரு செய்தி. அதோடு இவருக்கு ஆதரவாக பா.ஜ.க. முக்கியப் புள்ளிகள் வந்து செல்கிறார்கள். வீடு வீடாக நோட்டீஸ் வழங்குகிறார்கள். அபார்ட்மென்ட், பார்க் என பொது இடங்களில் கவனம் செலுத்தி வாக்கு சேகரிக்கிறார் வினோஜ். இந்த நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அனுபவம் மனோஜுக்கு இருக்கிறது. வட மாநிலத்தவர் மற்றும் இந்து மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் குறி வைத்து கடுமையாக உழைத்துவருகிறார்.

இந்த நிலையில் இங்கு பணநடமாட்டம் அதிகம் இருப்பதாகவும், இதனை தடுத்து நிறுத்துமாறும் பா.ஜ.க. மேலிடத்துக்கு வினோஜ் தகவல் கொடுத்திருக்கிறாராம். கையும் களவுமாக பண நடமாட்டத்தைக் கண்டுபிடித்து தற்காலிகமாக தேர்தலை நிறுத்திவிட்டால், தனியே தேர்தல் நடக்கும். அப்போது எளிதில் வெற்றி அடையலாம் என்று கணக்கு போடுகிறார்களாம். சிற்றரசுவை மடக்குவதன் மூலம் மாறனை முடக்க பிளான் போடுகிறார்கள்.

ஆனால், இதுபோல் எத்தனையோ பாலிடிக்ஸ்களை பார்த்தவர்கள் என்பதால் இப்போதே தி.மு.க. உஷாராகி இருக்கிறதாம். எப்படியோ மீண்டும் மாறனுக்கு ஜே…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link