News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

நடிகர் அஜித்துக்கு தலையில் அறுவை சிகிச்சை..? சென்னையில் குவியும் ரசிகர்கள்

நடிகர் அஜித்குமாருக்கு தலையில் அறுவை சிகிச்சை நடந்திருப்பதாக வெளிவரும் தகவலால் கவலையடைந்திருக்கும் ரசிகர்கள் சென்னை மருத்துவமனையில் குவிந்து வருகிறார்கள். நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். அஜர்பைஜான் நாட்டில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த மாதம் சென்னை வந்த அஜித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் மீண்டும் அஜர்பைஜான் செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், திடீரென்று அஜித்குமாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரதுஉடல்நிலையை பரிசோதனை செய்து, […]

நிவேதா பெத்துராஜ்க்கு ஆதரவாக அ.தி.மு.க..? என்னதான் நடக்குது இங்கே..?

அமைச்சர் உதயநிதி துபாயில் நிவேதா பெத்துராஜ்க்கு மிகப்பெரிய சொத்து வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்று சவுக்கு சங்கர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஒட்டுமொத்த சினிமா உலகமும் அரசியல்வாதிகளும் அமைதி காக்கும் நேரத்தில் அ.தி.மு.க.வில் இணைந்திருக்கும் காயத்ரி ரகுராம் கடுமையாக கண்டனம் தெரிவித்திருப்பது ஆச்சர்யத்தை உருவாக்கியிருக்கிறது. சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு குறித்து கண்ணீர் விளக்கம் கொடுத்திருக்கும் நிவேதா, ‘நான் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவள். யாருடைய ஆதரவும் எனக்குத் தேவையில்லை, அதேநேரம், இந்த குற்றச்சாட்டை சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் போவதில்லை’ என்று தெரிவித்திருந்தார். […]

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆடுகளம் நடிகர்!

கடந்த 2011ல வெற்றிமாறன் இயக்கத்துல தனுஷ் நடிச்சு தேசிய விருது வாங்கின படம் ஆடுகளம். இந்த படத்துல தனுசுடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்டுச்சுன்னா அதுக்கு காரணம் பேட்டைக்காரன் கேரக்டர்ல நடிகர் ஜெயபாலன் கொடுத்த டப்தான். அதோட பாண்டியநாடு, மெட்ராஜ், இன்று நேற்று நாளை படங்கள்லயும் இவருடைய நடிப்பு சிறப்பாவே இருந்துச்சு.  நடிகர், எழுத்தாளர்னு மல்டி டேலண்டடான ஜெயபாலனுக்கு இப்ப வயசு 79. தமிழ், தெலுங்கு, மலையாளம்னு ஆல் லேங்குவேஜ்லயும் பிசியா நடிச்சிட்டு இருந்த ஜெயபாலன் இப்ப கல்லீரல்ல […]

சிவகுமார் இப்படி அட்டூழியம் செய்யலாமா..? வயதுக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா..?

பொதுவெளியில் கம்பராமாயணம், திருக்குறள் போன்றவைகளைப் பேசி அப்ளாஸ் வாங்கும் நடிகர் சிவகுமார், அவ்வப்போது ஏடாகூட காரியங்களைச் செய்து சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். முன்பு செல்ஃபி எடுக்க முன்வந்தவரின் செல்போனை தூக்கிப் போட்ட சிவகுமார் இப்போது பொன்னாடை போர்த்தவந்த முதியவரின் கையில் இருந்து அதை பறித்து தூர வீசியிருக்கிறார். இதை பார்த்த அத்தனை பேரும் அதிர்ந்துபோகிறார்கள். யோகா, தியானம், அன்பு, நேர்மை என்றெல்லாம் நிறையவே பேசும் சிவகுமார் இப்படி செய்யலாமா என்பது அத்தனை பேர் மனதிலும் கேள்வியாக எழுகிறது. படித்த […]

ரஜினிகாந்த், வைரமுத்து கருணாநிதி நினைவிடத்தில் என்ன சொன்னாங்க தெரியுமா..? வைரல் டாக்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்த கருணாநிதியின் நினைவிடத்தை சுற்றிலும் கலைஞரின் பொன்மொழி வாசகங்களை கல்வெட்டுகள் தாங்கி நிற்கின்றன. வியட்நாம் நாட்டின் மார்பிள் கல்லில் அவருடைய உருவம் பிரமாண்டமாக பொறிக்கப்பட்டுள்ளது. இது உதயசூரியன் வடிவமைப்பை கொண்டுள்ளது. பகல் நேரத்தில் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும் இந்த தோற்றம் இரவு நேரத்தில் ‘லேசர்’ மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் நவீன வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  ‘கலைஞர் உலகம்’ என்ற டிஜிட்டல் அருங்காட்சியகத்துக்கான சுரங்கப்பாதை அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் உள்ளே நுழைந்ததும் கலைஞர் […]

அடேங்கப்பா, கருணாநிதி சதுக்கத்தில் இத்தனை ஹைடெக் அட்டகாசங்களா… பார்க்க மறந்துடாதீங்க…  

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த கருணாநிதி சதுக்கத்தில் புத்தம் புதிதாக ஏராளமான ஏற்பாடுகள் அட்டகாசமாக செய்யப்பட்டுள்ளன. அண்ணா சமாதியில், “எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது” எனப் பொறிக்கப்பட்டுள்ளது போன்று கருணாநிதி சமாதியில், “ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்” எனும் வாசகம் கலைஞரின் எண்ணப்படியே பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு கருணாநிதி அமர்ந்து எழுதும் வடிவிலான சிலை வடிக்கப்பட்டுள்ளது. கலைஞர் சதுக்கத்தின் முன்னே இருபுறமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழ்ச் செம்மொழி என ஒன்றிய அரசு ஏற்ற […]

கருணாநிதி நினைவிடம் திறந்துவைத்து ஸ்டாலின் நெகிழ்ச்சி… அண்ணாவுக்கும் மரியாதை

மெரினா கடற்கரையில் பிரமாண்டமான முறையில் கலைநயத்துடன் கட்டப்பட்ட அண்ணா, கலைஞரின் நினைவிடங்களை பொதுமக்கள் பார்வைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து நெகிழ்ச்சி அடைந்தார். மெரினா கடற்கரையில் முதன்முதலாக அண்ணாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. தமிழினத் தலைவராக திகழ்ந்த அண்ணா 1969 பிப்.3ம் தேதி மறைந்த பின் அவருக்கு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் மிகச் சிறந்த கட்டிடக் கலை வடிவமைப்புடன் கலைஞரால் நினைவிடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வராக 19 ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்து, தமிழ்நாட்டை […]

சசிகலா வீட்டுக்குப் போன ரஜினிகாந்த்..! என்ன பேசுனாங்கன்னு தெரியுமா..?

தான் ஆசைப்பட்ட மாதிரியே போயஸ் கார்டனுக்கு சசிகலா குடியேறிவிட்டார். இனிமேல் தன்னுடைய அரசியல் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார். இந்த நிலையில், இன்று சசிகலாவை ரஜினிகாந்த் குடும்பத்தோடு சென்று சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்துக்கு எதிராக பிரம்மாண்டமான பங்களாவை கட்டி குடிபுகுந்துள்ளார் சசிகலா. இந்த பங்களா 24000 சதுர அடி கொண்டது. வேதா இல்லத்தை விட மிகப் பெரியது. தரைதளமும், அதற்கு மேல் இரண்டு தளங்களுமாக இந்த பங்களாக கட்டப்பட்டுள்ளது. இந்த […]

மதுரையில் விஜய் கட்சியின் முதல் மாநாடு..! ஏப்ரலுக்கு ரெடி போஸ்டரை அடி

அரசியல் சென்டிமென்ட் வகையில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி விஜயகாந்த், கமல்ஹாசன் என்று அத்தனை பேரும் முக்கியமான நிகழ்ச்சிகளை மதுரையில் தொடங்குவார்கள். இதே பாணியில் நடிகர் விஜய்யும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் தொடங்க இருக்கிறாராம். ஏப்ரல் மாத இறுதியில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் அதற்குள் முடிந்துவிடும் என்று கணக்குப் போட்டே ஏப்ரல் இறுதி என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். எனவே, நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு, இந்த […]

தேர்தலில் நிற்காமலே எம்.பி. ஆகிறார் கமல்ஹாசன்…? மக்கள் நீதி மய்யம் 7ம் ஆண்டில் தி.மு.க.வுடன் டீல் ஓவர்

இன்று மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு ஏழாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிற்காமலே கமல்ஹாசன் எம்.பி.ஆகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்லன. ஏழாம் ஆண்டு குறித்து கமல்ஹாசன், ‘கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகியகாலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோசிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம். மக்களுக்கு அவர்களுடையகடமையை நினைவுறுத்துவதும், தலைமைக்குத் தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியமானது.ஜனநாயகத் தேரை நாம் அனைவருமே சேர்ந்துதான் […]