விஜய் ரசிகர்களுக்கு இது செய்யணும் என்பது கூட தெரியாதா..? 20 பேர் மீது வழக்குப் பதிவு

தமிழக வெற்றிக் கழகம் என்று அறிக்கை மூலம் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், 2 கோடி உறுப்பினர் சேர்க்கைக்கு உத்தரவு போட்டிருக்கிறாராம். இதையடுத்து ஊர் முழுவதும் கொடி ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவு போட்டிருக்கிறார்கள். இதையடுத்து உளுந்தூர் பேட்டையில் கொடி ஏற்றி விட்டார்கள். ஆனால் கிராமங்களில் கொடியேற்றுவதற்கு வருவாய்த்துறை, காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி வைக்கப்பட்ட த.வெ.க. கொடிக் கம்பங்களை போலீசார் அகற்றியதால் பரபரப்பு நிலவியது. இப்படி அனுமதியின்றி கட்சிக் கொடி ஏற்றியதாக […]
கூவத்தூர் கும்மாளத்திற்கு நடிகை த்ரிஷாவை கூட்டிச் சென்றாரா கருணாஸ்..? எடப்பாடி டீமுக்குள் கசமுசா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூவத்தூரில் நடிகைகளை எல்லாம் கூட்டி வந்து, எம்.எல்.ஏக்களை வைத்து கும்மாளம் அடித்தார் என்கிறார் ஏ.வி ராஜூ. இவர் சேலம் அ.தி.மு.க. மேற்கு ஒன்றியச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். இவருக்கும் சேலம் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் வெங்கடாசலத்துக்கும் இடையிலான மோதல் காரணமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதன்படி, மாநகர மாவட்டச் செயலாளர் வெங்கடாசலத்துக்கு 1,000 கோடி ரூபாய் சொத்து இருப்பதைப் பார்க்கும்போது, அவர் எடப்பாடி பழனிசாமிக்கு பினாமியாக இருப்பார் […]
நடிகர் விஜய்யின் முதல் அரசியல் கூட்டத்தில் என்ன ஸ்பெஷல்..?

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை பனையூர் தலைமை நிலைய செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் அணித் தலைவர்கள் பங்கேற்றார்கள். கலந்துகொண்டனர். கட்சி தொடங்கப்பட்ட பிறகு விஜய் நடத்தும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் முதலில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். அந்த உறுதிமொழியில், ’நம் நாட்டின் விடுதலைக்காகவும், நமது […]
விஜய்க்கு ரசிகர்கள் கோரிக்கை… பெயர் திருத்தம் போதாது… அப்பாவைக் கொண்டுவாங்க…

இந்த உலகிலேயே ஒரே ஒரு அறிக்கை மட்டும் கொடுத்து கட்சி தொடங்கிய முதல் நபர் நடிகர் விஜய் மட்டும் தான். அவரது தமிழக வெற்றி கழகம் பெயரில் தவறு இருக்கிறது, க் சேர்க்க வேண்டும் என்று பலரும் சொல்லிவந்தார்கள். இத்தனை நாளும் அமைதியாக இருந்த விஜய் திடீரென, க் சேர்க்கச் சொல்லிவிட்டார். எனவே இனி விஜய் கட்சி தமிழக வெற்றிக் கழகம் என்று அழைக்கப்படுமாம். ஆனால், அவரது ரசிகர்கள் கோரிக்கை வேறாக இருக்கிறது. ‘கட்சி விவகாரம் பேசுவதற்கும் […]
கமலஹாசனுக்கு எதிராக தேர்தலில் நிறுத்தப்படுகிறாரா கெளதமி..? அ.தி.மு.க.வில் இணைந்த மர்மம்

தேர்தல் நேரம் நெருங்கும்போது கட்சி தாவல் நடப்பது சகஜமே. ஆனால், பா.ஜ.க.வில் இருந்து நடிகை கெளதமி எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்திருப்பது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட நடிகை கெளதமி ஆர்வமாக இருந்தார். பூர்வாங்க வேலைகளும் தொடங்கியிருந்தார். ஆனால், ராஜேந்திரபாலாஜி காரணமாக கெளதமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்தே, பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் தனது நிலத்தை விற்று பண மோசடி செய்துவிட்டதாக அவர் வெளிப்படையாகப் புகார் தெரிவித்திருந்தார். ஆனால், கட்சி […]
ரஜினி படத்துக்கு இந்த பரிதாப நிலையா..? மணிகண்டன் ஓவர்டேக் பண்ணிட்டாரே…

ரஜினிகாந்த் கேமியோ ரோல் என்றாலும் கிட்டத்தட்ட ரஜினி படம் போலவே லால் சலாம் படத்துக்கு புரமோஷன் செய்யப்பட்டன. எக்கச்சக்க பில்டப் கொடுக்கப்பட்டன. சங்கி இல்லை, என் அப்பாவுக்கு எல்லா மதமும் ஒன்று தான் என்று இயக்குனரும் ரஜினியும் மகளுமான ஐஸ்வர்யா முன்கூட்டியே சமாதானக் கொடி வீசியிருந்தார். ஆனால், எதுவுமே தியேட்டரில் செல்லுபடியாகவில்லை. ரஜினியின் கேரக்டர் அதிரடியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதே தவிர, கதையோட்டத்தில் செட் ஆகவில்லை, யாருடைய நெஞ்சையும் தொடவில்லை. அதனால் படத்துக்கு கலெக்ஷன் சுத்தமாக குறைந்துவிட்டது என்கிறார்கள். முதல் […]
சூர்யாவை ஏமாற்றினாரா வெற்றிமாறன்..? வாடிவாசலில் நுழைகிறார் தனுஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட, ‘வாடிவாசல்’ படத்துக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவியது. சூர்யா இந்த படத்துக்காக நிறையவே ஹோம் ஒர்க் செய்து வந்தார். ஜல்லிக்கட்டு கதை என்பதால் மாடுகளுடன் பழகி, மாடு பிடிப்பவர்களுடன் கலந்து பேசிவந்தார். ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய தருணத்திலிருந்தே நிறைய பிரச்னைகள் வந்தன. வெற்றிமாறன் மேக்கிங் ஸ்டைலுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் ஏனோ சரிப்பட்டு வரவில்லை. அதனால், சூட்டிங்கில் சின்னச்சின்ன மனஸ்தாபங்கள் நிகழ்ந்தன. இந்த நேரத்தில் தான் திடீரென இந்த பிராஜெக்ட்டில் அமீரை […]
தமிழக முதல்வர் விஜய்… புதுவை முதல்வர் புஸ்ஸி ஆனந்த்..? புஸ்ஸியின் கேரள மாந்திரீக வில்லங்க பிளாஸ்பேக்

நடிகர் விஜய்க்கும் அவரது கட்சி நிர்வாகிகள், ரசிகர்களுக்கு மட்டுமின்றி குடும்பத்தினருக்கும் இடையில் நந்தி போன்று நிற்பவர் புஸ்ஸி ஆனந்த். யார் இந்த புஸ்ஸி ஆனந்த் என்று விசாரித்தால் எக்கச்சக்க வில்லங்க விவகாரங்கள் வந்து கொட்டுகின்றன. முதலில் அவர் பெயருக்கு முன்னே இருக்கும் புஸ்ஸி பற்றி பார்க்கலாம். புதுவையில் சுமார் 5,000 ஓட்டுகள் உள்ள சிறிய சட்டமன்றத் தொகுதி தான் ‘புஸ்ஸி தெரு’. இந்த தொகுதியில் புதுச்சேரி கண்ணன் தொடங்கிய புதுவை மாநில காங்கிரஸ் சார்பில், 2006-ம் ஆண்டு […]
விஜய்யுடன் மோதும் வேல்முருகன்..? யாருக்கு கிடைக்கும் டிவிகே..?

தமிழக வாழ்வுரிமைக் கட்சியைத் தொடங்கி நடத்திவருகிறார் தி.வேல்முருகன். இவர் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாக இடம் பிடித்து சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். இவரது தமிழக வாழ்வுரிமைக் கட்சியை ஆங்கிலத்தில் டிவிகே என்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார். இப்போது விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றி கழகத்தையும் டிவிகே என்றே பதிவு செய்திருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் வேல்முருகன்ன், ‘நடிகர் விஜய் தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை ஆங்கிலத்தில் டிவிகே என்று […]
ரஜினியின் லால் சலாம் படம் எப்படி இருக்குது…? எக்ஸ்பிரஸ் விமர்சனம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோவாக நடித்திருக்கும் லால் சலாம்திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் கேமியோவாக நடிக்கிறார் என்றாலும் படம் எப்படி என்று நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் ஹீரோவாக நடித்துள்ளனர். மும்பை ரிட்டர்ன்ஸ் கேங்ஸ்டர் மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினி நடித்திருக்கிறார். ரஜினிகாந்த் மொத்தமே 20 நிமிடங்கள் மட்டுமே படத்தில் வருகிறார் என்றாலும் தெறிக்கவிடுகிறார் என்று அவரது ரசிகர்கள் படத்தை பாராட்டித் தள்ளியுள்ளனர். குறிப்பாக, ரஜினி […]

