விந்தியாவுக்கு கை கொடுக்க கார்த்திக் வந்தாச்சு… குஷியில் அ.தி.மு.க.

கடந்த தேர்தலில் எடப்பாடிக்கு ஆதரவாக பேசிவந்த செந்தில் இப்போது எதிர்முகாமில் பேசிக்கொண்டு இருக்கிறார். நட்சத்திரங்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவருவது நடிகை விந்தியா மட்டுமே. அவர் ஸ்டாலின், உதயநிதி என்று அத்தனை பேரையும் கடுமையாகத் தாக்கி பேசிவருகிறார். இப்போது அவருக்கு கை கொடுக்க நடிகர் கார்த்திக்கை கடைசி கட்டத்தில் இறக்கி விட்டுள்ளனர். தேர்தல் நேரங்களில் மட்டும் களத்தில் எட்டிப் பார்க்கும் கார்த்திக் அதன்பிறகு காணாமல் போய்விடுவார். ஒரு காலத்தில் தென் மாவட்டங்களில் கார்த்திக்குக்கு அமோக வரவேற்பு இருந்தது. […]
இந்திய கிரிக்கெட் வீரருக்கு அஜித் கொடுத்த ஷாக்

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரோட விடாமுயற்சி படத்தோட அப்டேட்டும், குட்பேட் அக்லி படத்தோட அப்டேட்டும் வந்துக்கிட்டே இருக்கு. ஹெல்த் இஷ்யூஸ்ல இருந்து ரெக்கவரான அஜித் அவரோட மகன் ஸ்கூல்ல ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுத்தது ரசிகர்கள நிம்மதியடைய செய்துச்சு. சினிமாவோட சேர்த்து குக்கிங், பைக் ரைடிங், பேமிலி பார்ட்டின்னு தன்னோட லைஃப தனக்கு பிடிச்ச மாதிரி நெகட்டிவ் கமெண்ட்ச கண்டுக்காம வாழ்ந்துக்கிட்டு இருக்காரு அஜித். மல்டிடேலண்டடான அஜித்த லைஃப்ல ஒரு முறை பாத்திடணும்னு ரசிகர்கள் மட்டும்தான் நினைக்கிறாங்கன்னா அதுதான் இல்ல. […]
ஹீரோவான டைரக்டர் ஹரியின் மகன்

நடிகர் விஜயகுமார் குடும்பத்துல இருந்து பேரன் ஸ்ரீஹரி அதாங்க வனிதாவோட மகன் ஹீரோவாகுறார். இப்ப இன்னொரு பேரனான ஸ்ரீராமும் ஹீரோவாகி இருக்காரு அப்படிங்குறதுதான் ஹாட் டாப்பிக்கே. கமர்ஷியல் ஹிட் படங்கள இயக்குறதுல கெட்டிக்காரரான ஹரி சாமி, சிங்கம் உள்ளிட்ட படங்கள தொடர்ந்து இப்ப விஷால் நடிப்புல ரத்னம் படத்த டைரக்ட் பண்ணிட்டு இருக்காரு. வர்ற 26ம் தேதி ரத்னம் இந்த படம் ரிலீசாகப் போகுது. இந்த நிலையில ஹரி, பிரீத்தா விஜயகுமார் தம்பதியோட மூத்த மகன் மகன், […]
கர்ப்பத்தை மறைக்கும் நட்சத்திர ஜோடி!

நட்சத்திர தம்பதியான ஆதி, நிக்கி கல்ராணியோட லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ்தான் இப்ப ஹாட் டாப்பிக்கே. பிசியா நடிச்சிட்டு இருந்த ஆதியும், நிக்கி கல்ராணியும் யாகாவராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் படத்துல சேர்ந்து நடிச்சதுல லவ்வர்ஸ் ஆனாங்க. அதைத்தொடர்ந்து கடந்த 2022ம் வருஷம் இவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் தொடர்ந்து நடிச்சிட்டுதான் இருக்காங்க. டைம் கிடைக்கும் போதெல்லாம் தங்களோட ரொமாண்டிங் அன்டு டிராவலிங் போட்டோஸ் அண்டு வீடியோச சோசியல் மீடியாவுல வைரலாக்கிட்டு இருக்காங்க. அந்த வகையில லேட்டஸ்டா நிக்கி […]
கமல்ஹாசனின் ஓசி பிரசாரம்… மக்கள் நீதி மய்யத்தினர் என்ன சொல்றாங்க..?

ஒரே ஒரு சீட் கூட வாங்காமல் இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு இலவசமாக பிரசாரம் செய்துவருகிறார் கமல்ஹாசன். நீண்ட நாட்களுக்குப் பிறகு தேர்தல் களத்திற்கு வந்திருக்கும் கமல் பேச்சு எப்படி என்று மக்கள் நீதி மய்யத்தினரிடம் பேசினோம். ‘’ஈரோடு, திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளில் கமல் பேசியது மிகவும் சிறப்பாக இருக்கிறது.. குறிப்பா மோடியை வெளித்து வாங்குகிறார். திருச்சியில் பேசியபோது, ’இந்திய தேசத்தின் பன்முகத்தன்மையைக் காக்கும் நேரம் இது. இந்த ஊரில் இருந்து இதைக் கூறுவது பெருமைக்குரியது. ஏனெனில், […]
ராதிகாவுக்கு பிரசாரம் செய்ய குஷ்பு மறுப்பு… களம் இறங்கும் கமல், கருணாஸ்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதில் 29 கட்சிகளை சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 40 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் நடிகர் கருணாஸ், நடிகர் கமல்ஹாசன் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் பொதுச்செயலாளர் எடப்பாடி உள்ளிட்ட 40 […]
மன்சூர் அலிகானுக்கு வந்த யோகத்தைப் பாருங்கப்பா… அ.தி.மு.க.வுடன் 2 சீட்டுக்கு கூட்டணிப் பேச்சுவார்த்தை

அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து முக்கியப் புள்ளிகள் எல்லாம் போயஸ் தோட்டத்து வாசலில் காத்துக்கிடந்தது ஒரு காலம். இப்போது மன்சூர் அலிகானுடன் கூட்டணி பேசும் அளவுக்கு கட்சி நிலைமை மாறியிருக்கிறது. ராமதாஸ் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தே கூட்டணிப் பேச்சுவார்த்தையை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். ஆனால், பா.ஜ.க.வும் பெரிய ஆஃபர் கொடுப்பதால் அன்புமணி அந்தப் பக்கம் செல்வதற்கே ஆர்வம் காட்டுகிறார். பிரேமலதாவை கடந்த தேர்தலில் கேட்டுக்குப் பக்கத்தில் வரவிடாமல் விரட்டியடித்தார்கள். எனவே, அவரும் பா.ஜ.க.வுடனே […]
நைட் 2 மணிக்கு சம்பவம் செய்த ராதிகா… ச.ம.க.வுக்கு சங்கு ஊதிய சரத்குமார்

மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கு கட்சி தேடும் பா.ஜ.க.விடம் சிக்கிய நடிகர் சரத்குமார், அவரது சமத்துவ மக்கள் கட்சியை திடீரென கலைத்திருப்பது திடீர் திருப்பமாக பார்க்கப்படுகிறது. சில நாள்களுக்கு முன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பா.ஜ.க.வுடன் கூட்டணியை உறுதி செய்தார். இந்த நிலையில் திடீரென தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில், தனது கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்துவிட்டார். சென்னையில் ச.ம.க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதை அடுத்து, ராதிகா இரவு 2 […]
மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய் பிச்சை… குஷ்புக்கு வாய்க்கொழுப்பு..?

தமிழக பெண்களுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கிவருவதை தி.மு.க.வின் சாதனையாக சொல்லிவருகிறது. இந்த நிலையில் மாதம் ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டா மக்கள் ஓட்டு போடுவாங்களா என்று குஷ்பு கூறியது பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. போதைப் பொருள் எதிர்ப்பு போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நிர்வாகியும், தேசிய மகளிரணி ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பூ, ‘ தமிழ்நாட்டில் போதைப்பொருள் பிரச்சினை தலைவிரிச்சு ஆடிட்டு இருக்கு. அதை திமுக அரசு தீர்த்து வைக்கல. […]
மோடியை விமர்சிக்க விஜய்க்கு என்ன பயம்..? முதல் அறிக்கை ரிப்போர்ட்

அரசியலில் இறங்குவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தை உருவாக்கியிருக்கும் நடிகர் விஜய் முதன்முதலாக இரண்டு வரியில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அது தமிழகம் முழுக்கவே சலசலப்பு ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அறிக்கையில், ‘சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ் நாடில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். […]

