News

Follow Us

கடந்த 2011ல வெற்றிமாறன் இயக்கத்துல தனுஷ் நடிச்சு தேசிய விருது வாங்கின படம் ஆடுகளம். இந்த படத்துல தனுசுடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்டுச்சுன்னா அதுக்கு காரணம் பேட்டைக்காரன் கேரக்டர்ல நடிகர் ஜெயபாலன் கொடுத்த டப்தான். அதோட பாண்டியநாடு, மெட்ராஜ், இன்று நேற்று நாளை படங்கள்லயும் இவருடைய நடிப்பு சிறப்பாவே இருந்துச்சு. 


நடிகர், எழுத்தாளர்னு மல்டி டேலண்டடான ஜெயபாலனுக்கு இப்ப வயசு 79. தமிழ், தெலுங்கு, மலையாளம்னு ஆல் லேங்குவேஜ்லயும் பிசியா நடிச்சிட்டு இருந்த ஜெயபாலன் இப்ப கல்லீரல்ல ஏற்பட்ட பிரச்சினை காரணமா ஹாஸ்பிட்டல் அட்மிட் ஆகியிருக்காரு. மேலும் இவர் உயிருக்கு ஆபத்தான நிலையில இருக்கிறதாகவும் ஒரு டாக் போயிட்டு இருக்கு. ஜெயபாலனுடைய குடும்பம் பிரான்ஸ் நாட்டுல இருக்கிறதால அவர பாக்க யாரும் இன்னும் வரலன்னும் சொல்லப்படுது.


ஹாஸ்பிட்டல்ல அவர் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு இருக்கிற போட்டோ இப்ப சோசியல் மீடியாவுல வைரலாகிட்டு இருக்கு. ஜெயபாலன் சீக்கிரமே குணமாகணும்னு கமெண்ட் பண்றாங்க ரசிகர்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link