News

Follow Us

அமைச்சர் உதயநிதி துபாயில் நிவேதா பெத்துராஜ்க்கு மிகப்பெரிய சொத்து வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்று சவுக்கு சங்கர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஒட்டுமொத்த சினிமா உலகமும் அரசியல்வாதிகளும் அமைதி காக்கும் நேரத்தில் அ.தி.மு.க.வில் இணைந்திருக்கும் காயத்ரி ரகுராம் கடுமையாக கண்டனம் தெரிவித்திருப்பது ஆச்சர்யத்தை உருவாக்கியிருக்கிறது.

சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு குறித்து கண்ணீர் விளக்கம் கொடுத்திருக்கும் நிவேதா, ‘நான் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவள். யாருடைய ஆதரவும் எனக்குத் தேவையில்லை, அதேநேரம், இந்த குற்றச்சாட்டை சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் போவதில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷா பெயர் அடிபட்ட நேரத்தில் நடிகைக்கு ஆதரவாக கோடம்பாக்கத்திலும் அனைத்து கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனால், நிவேதாவுக்கு ஆதரவு கொடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை.

இந்த நிலையில் காயத்ரி ரகுராம், ‘பெண்ணின் பெயரை வெளியிடுவது அல்லது எந்த ஒரு பெண்ணின் கடந்த காலத்தை மீண்டும் எழுப்புவதும், ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறுவதும் கண்டிக்கத்தக்கது. தயவு செய்து தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் திரையுலக நடிகைகள் அரசியலில் ஈடுபடாதவர்களை அவர்களின் பெயரை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கவும். அதிகமாக அரசியல் பணம் (மக்கள் பணம்) தொடர்புடைய குற்றச்சாட்டுகள் இருந்தால் ஆதாரத்துடன் அதை மட்டுமே வெளியிடுங்கள்’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

கட்சி மேலிடத்தில் அனுமதி வாங்கிவிட்டு சின்னவர் உதயநிதிக்காக பொங்கியிருக்கிறாரா என்று அ.தி.மு.க.வினரே ஆச்சரியப்படுகிறார்கள். பெண்ணுக்குப் பெண் என்று உரிமைக் குரல் என்றே எடுத்துக்கொள்வோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link