News

Follow Us

இன்று மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு ஏழாம் ஆண்டில் அடியெடுத்து
வைக்கிறது. இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிற்காமலே கமல்ஹாசன் எம்.பி.
ஆகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்லன.

ஏழாம் ஆண்டு குறித்து கமல்ஹாசன், ‘கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய
காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ
சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம்.

கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம். மக்களுக்கு அவர்களுடைய
கடமையை நினைவுறுத்துவதும், தலைமைக்குத் தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியமானது.
ஜனநாயகத் தேரை நாம் அனைவருமே சேர்ந்துதான் இழுக்கவேண்டும் என்கிற உணர்வை ஊட்டுவதே அவசியம்
மிக்க அரசியல் செயல்பாடு.

மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு
நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. சாதி மதச் வழக்குகள் இருக்கும்வரை, வடக்கு
தெற்கு பேதம் வாழும் வரை, ஊழலும் சீர்கேடுகளும் தொடரும் வரை நமது போராட்ட செயல்பாடுகள்
ஓயாது. உயர்த்திய கொடிகள் தாழாது’ என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து
இரண்டு தொகுதிகளில் நிற்க விரும்புகிறது. ஆனால், தி.மு.க.வில் ஏற்கெனவே கூட்டணிக் கட்சிகளுக்கு
இடையில் சீட் பங்கு பிரிப்பதில் நிறையவே சிக்கல் இருப்பதால் புதிய கட்சியை நுழைக்க
விரும்பவில்லை. அதேநேரம், கமல்ஹாசனை வெளியே அனுப்பவும் விரும்பவில்லை.

ஆகவே, ராகுல் காந்திக்கு ஆதரவு தெரித்து தேர்தலில் பரப்புரை
செய்ய வேண்டும் என்றும் அதற்காக கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்படும்
என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் முடிவு அறிவிப்பதாக கமல் உறுதி அளித்திருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link