செல்வாக்கு மிக்க சர்வதேச தலைவர்கள்: பிரதமர் மோடிக்கு கிடைத்தது இடம் என்ன?

சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளது பா.ஜ.க.வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் சர்வதேச அளவில் பிரதமர் மோடி செல்வாக்கு மிக்க தலைவராக விளங்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகளவில் செல்வாக்கு மிக்க சர்வதேச தலைவர்கள் பட்டியலில் 76 சதவீதம் பேரின் ஆதரவு பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது. அதன்படி பிரதமர் மோடி முதலிடத்திலும், சுவிட்சர்லாந்து நாட்டின் அதிபர் அலைன் பெர்செட் 2வது […]
ஏ.வி.எம். அருங்காட்சியகத்தை அலங்கரித்த அஜித் பைக்!

ஏ.வி.எம். அருங்காட்சியகத்தில் நடிகர் அஜித் திருப்பதி திரைப்படத்தில் பயன்படுத்திய பைக்கை இருப்பது கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகிறார்கள். தமிழ் சினிமாவுக்கு முகவரி என்று சொல்லும் அளவுக்கு பல்வேறு சாதனைகளை புரிந்த ஏ.வி.எம்.நிறுவனம் தொடங்கப்பட்ட 1945ம் ஆண்டு முதல் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி.ராமாராவ், ஜெயலலிதா உள்ளிட்ட 5 முதலமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. தமிழ் மொழி மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாளம் என கடந்த 77 வருடங்களில் 178 திரைப்படங்களை தயாரித்துள்ளது. இருப்பினும் ஏ.வி.எம். […]
உலகிலேயே நீண்ட முடி கொண்ட சிறுவன்! கின்னஸ் சாதனை!

உலகிலேயே நீண்ட முடி கொண்ட சிறுவன் என்ற கின்னஸ் சாதனையை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் படைத்துள்ளார். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற பல்வேறு மனிதர்களை நாம் பார்த்து வியந்திருப்போம். கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்காகவே சிலர் நகங்களை வளர்ப்பது, கண் இமைகளை வளர்ப்பது, தலைமுடியை வளர்ப்பது என அட்டகாசம் செய்வார்கள். அந்த வகையில் தற்போது உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சிதக்தீப் சிங் சாஹல் என்ற 15 வயது சிறுவன் பெண்களை விட நீளமான […]
திடீரென்று ரத்தான ‘இந்தியா கூட்டணி’யின் முதல் பொதுக்கூட்டம்! பின்னணி இதுதான்!

இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற இருந்த நிலையில் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 28 எதிர்க்கட்சியினர் ஒன்றாக இணைந்துள்ள கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிட்டனர். இந்தியா கூட்டணி என்ற பெயருக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் இக்கூட்டணியினர் தொடர்ந்து தங்கள் கட்சிப்பணிகளை செய்து வருகின்றனர். இதுவரை இந்தியா […]
இணையத்தை கலக்கும் ‘லியோ’ விநாயகர்! ரசிகர்கள் உற்சாகம்!

சென்னையில் உள்ள மார்க்கெட்டுகளில் தற்போது நடிகர் விஜய்யின் ‘லியோ’ உருவத்தில் விநாயகர் சிலைகள் அமோக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் (18ம் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. வெவ்வேறு உருவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். பெரியளவு முதல் சாதாரண அளவு வரையிலான பிள்ளையார் சிலைகளை ஆர்வமுடன் பக்தர்கள் கவனிப்பது வழக்கம். அந்தவகையில் புஷ்பா, பாகுபலி என சினிமா கதாபாத்திரங்களையும் மையமாக வைத்து விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டது. […]
இளவரசி டயானாவின் ஸ்வெட்டர் ரூ.9 கோடிக்கு ஏலம்! அதில் அப்படி என்ன விசேஷம்?

மறைந்த இளவரசி டயானா பயன்படுத்திய ஸ்வெட்டர் தற்போது 9 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது சர்வதேச அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அரசர் சார்லசின் முதல் மனைவியான டயானா கடந்த 1997ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார். டயானாவின் இந்த திடீர் மரணம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. 39 வயதில் உயிரிழந்த டயானா பயன்படுத்திய ஆடைகள் மற்றும் பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டு அவை அதிக விலைக்கு போவது சமீப காலமாக […]
களை கட்டிய திருமலை திருக்குடை ஊர்வலம்! லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தற்போது திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் களை கட்டியுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருப்பதி பிரம்மோற்சவம் வருகிற 18ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ காலங்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வருகிற 22ம் தேதி இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட வாகன சேவையின் போது வழக்கத்திற்கு அதிகமாக […]
இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

லக்னோவில் மேற்கூரை இடிந்து விழுந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஆனந்த் நகர் பகுதியில் உள்ள பழைய ரெயில்வே காலனியில் உள்ள வீட்டின் மேல்கூரை திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. அப்போது வீட்டிற்குள் இருந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். சத்தம் கேட்டு அதிர்ச்சியான அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். […]
அடுத்த 3 மாதங்களுக்கு கவனமாக இருக்க வேண்டும்! மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!

தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் கண்டறியப்படவில்லை என்றாலும், மக்கள் அடுத்த 3 மாதங்களுக்கும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் அண்டை மாநிலமான நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் நிபா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக வதந்திகள் இணையத்தில் உலா வந்தன. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியின் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டதுடன் பொது மக்களுக்கு எச்சரிக்கை […]
கடல் வளத்தை ஆய்வு செய்ய ‘மத்ஸ்யா 6000’ வாகனம் ரெடி! புகைப்படங்கள் வைரல்!

கடல் வளங்களை ஆய்வு செய்வதற்காக ‘மத்ஸ்யா 6000’ வாகனத்தை கடலுக்குள் செலுத்தும் சமுத்யாரன் திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளது உலக விஞ்ஞானிகளின் இருக்கை நுனிக்கே கொண்டு சென்றுள்ளது. நிலவை ஆராய்வதற்காக சந்திரான்3 விண்கலத்தை இந்தியா கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. அதைத்தொடர்ந்து சந்திராயன் 3 விண்ணில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அங்கிருந்து புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. அதைத்தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்&1 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக கடந்த […]

