News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் கண்டறியப்படவில்லை என்றாலும், மக்கள் அடுத்த 3 மாதங்களுக்கும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

தமிழகத்தின் அண்டை மாநிலமான நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் நிபா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக வதந்திகள் இணையத்தில் உலா வந்தன.

 

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியின் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டதுடன் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

அவர் பேசும் போது, ‘‘தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துக் கொண்டார். மேலும் தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 4,048 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த மா.சுப்பிரமணியன், மழை காலங்களில் டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவுவது வழக்கமானது என்று கூறினார். இருப்பினும் பொது மக்கள் அடுத்து வரும் 3 மாதங்களுக்கு மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்’’ என்று எச்சரித்துள்ளார்.

 

ஆங்காங்கே தண்ணீர் தேங்காமல் பொது மக்கள் பார்த்துக் கொள்ளும்பட்சத்தில் பகல் நேரங்களில் கடித்து டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தியை தவிர்க்கலாம் என்பது நிதர்சனமான உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link