News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

ஏ.வி.எம். அருங்காட்சியகத்தில் நடிகர் அஜித் திருப்பதி திரைப்படத்தில் பயன்படுத்திய பைக்கை இருப்பது கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகிறார்கள்.

 

தமிழ் சினிமாவுக்கு முகவரி என்று சொல்லும் அளவுக்கு பல்வேறு சாதனைகளை புரிந்த ஏ.வி.எம்.நிறுவனம் தொடங்கப்பட்ட 1945ம் ஆண்டு முதல் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி.ராமாராவ், ஜெயலலிதா உள்ளிட்ட 5 முதலமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது.

 

தமிழ் மொழி மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாளம் என கடந்த 77 வருடங்களில் 178 திரைப்படங்களை தயாரித்துள்ளது. இருப்பினும் ஏ.வி.எம். நிறுவனம் கடந்த சில வருடங்களாக எந்த திரைப்படத்தையும் தயாரிக்கவில்லை. இதனால் படப்பிடிப்பு தளத்தின் ஒரு பகுதி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

 

அதைத்தொடர்ந்து இந்நிறுவனம் தயாரித்த படங்களில் இடம்பெற்ற கார் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் திரைப்பட தயாரிப்புக்கு பயன்படுத்திய அனைத்து உபகரணங்களையும் இந்த மியூசியத்தில் வைத்துள்ளது.

 

அந்த வகையில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘திருப்பதி’ திரைப்படத்தில் அவர் பயன்படுத்திய பஜாஜ் பல்சர் 180சிசி 2004 என்ற  பைக் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ஏ.வி.எம். நிறுவனம் தெரிவித்துள்ளது. பைக் பிரியரான அஜித் பயன்படுத்திய பைக் குறித்த செய்தியை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link