சென்னை ‘எக்ஸ்பிரஸ் அவென்யு’வில் குவியும் கிரிக்கெட் ரசிகர்கள்! ஏன் தெரியுமா?

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யுவில் இன்றும், நாளையும் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதால் அதை காண கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். 13வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் மொத்தம் இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் நிலையில், தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள உலகக்கோப்பை தற்போது பல்வேறு நாடுகளில் தனது […]
முதல்வர் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்! வெளி வராத தகவல்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ள தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க.வினர் பங்கேற்றுள்ளனர். நாளை மறுநாள் (18ம் தேதி) நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்றைய தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அரசியல் பிரமுகர்கள் மத்தியில் முக்கிய நிகழ்வாக […]
விநாயகர் சதுர்த்தி: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால்!

விநாயகர் சதுர்த்தி: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால்! விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி நாளை மறுநாள் (18ம் தேதி) தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 74 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட […]
பிரம்மோற்சவ நாட்களில் திருப்பதியில் முக்கிய ஏற்பாடுகள்! முழு விவரம் உள்ளே!

திருப்பதி பிரம்மோற்சவம் வருகிற 18ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ காலங்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. * வருகிற 22ம் தேதி இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட வாகன சேவையின் போது வழக்கத்திற்கு அதிகமாக ஒன்று ஒருநாள் மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கான கோவிலை சுற்றி […]
சீமான் விவகாரத்தில் நடிகை விஜயலட்சுமி அந்தர் பல்டி! நள்ளிரவில் நடந்தது என்ன?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்குவதாக நடிகை விஜயலட்சுமி பகிரங்கமாக பேட்டி அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாகவும், 7 முறை கருக்கலைப்பு செய்யத் தூண்டியதாகவும் கடந்த 2011ம் ஆண்டு போலீசில் புகார் அளித்த நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் போனது. அதைத்தொடர்ந்து மீண்டும் கடந்த மாதம் […]
கரிசல் இயக்கத் தந்தை கி.ரா.வின் 100வது பிறந்தநாள் இன்று! இத்தனை சாதனைகளா?

கரிசல் இலக்கியத்தின் தந்தையான கி.ராஜநாராயணனுக்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவரின் சாதனைகளையும், சேவைகளையும் அனைவரும் அறியச் செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம். கோவில்பட்டி மக்களால் கி.ரா.என்று சுருக்கமாக அழைக்கப்படுபவர்தான் கி.ராஜநாரயணன். 1922ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி கோவில்பட்டி அருகில் உள்ள இடைசேவல் கிராமத்தில், ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியின் 5வது பிள்ளையாக பிறந்தார். இவருடைய முழு பெயர் ராயங்குல ஸ்ரீகிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். கி.ராஜநாராயணன் இயல்பில் […]
நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது எப்படி? உங்களுக்கான ஆலோனைகள் இதோ!

கேரளாவை உலுக்கி வரும் நிபா வைரஸ் தொற்றில் இருந்து எளிதாக தப்பிப்பது எப்படி என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம். நிபா வைரஸ் வௌவால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் ஒரு வைரஸ் தொற்றாகும். வௌவால்கள் கடித்த பழங்களை உட்கொள்வதால் நிபா வைரஸ் தொற்று உருவாகிறது. மேலும் அவற்றின் சிறுநீர், உமிழ்நீர் உள்ளிட்டவற்றாலும் நிபா வைரஸ் தொற்று ஏற்படுகிறது. வௌவால்கள் மூலம் வீட்டில் வளர்க்கப்படும் குதிரை, நாய், பூனை மற்றும் எலி உள்ளிட்ட உயிரினங்களுக்கும் பரவுவதால் அவற்றின் மூலம் […]
மர்ம காய்ச்சலுக்கு பலியான பயிற்சி மருத்துவர்! திருச்சியில் இளம்பெண் மரணம்!

திருவாரூரில் மர்ம காய்ச்சலுக்கு பயிற்சி மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே நோயின் தன்மை அறியப்படுகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிந்து என்ற மாணவி 5 ஆண்டு மருத்துவ படிப்பை முடித்துவிட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பயிற்சி மேற்கொண்டு வந்தார். கடந்த சில நாட்களாக சிந்து […]
சும்மா படுத்திருந்தா போதும் ரூ.88,000 பரிசு! எங்கே தெரியுமா?

நடிகர் வடிவேலு காமெடி காட்சி பாணியில் சும்மா படுத்திருந்தா போதும் 88 ஆயிரம் சம்பாதிக்கலாம் என்ற நூதன போட்டி மாண்டினீக்ரோ என்ற நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் அப்படி என்னதான் சுவாரசியம் இருக்கிறது என்பதை நாம் இங்கு பார்க்கலாம். நடிகர் வடிவேலு ‘கற்க கசடற’ என்ற திரைப்படத்தில், தன்னை மட்டமாக பேசிய ஒருவரை ஒரு மணி நேரம் சும்மா இருந்துக் காட்டு. அப்படி மட்டும் நீ சும்மா இருந்துக்காட்டிவிட்டால் 5 சவுக்கடி என்ன? 10 சவுக்கடி […]
இளம் வீரருக்கு பைக்கில் லிப்ட் கொடுத்த எம்.எஸ்.தோனி! வைரல் வீடியோ!

இளம் கிரிக்கெட் வீரரை, முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது பைக்கில் அழைத்து சென்று லிப்ட் கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். இருப்பினும் ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் கலந்து கொண்டுள்ளார். இருப்பினும் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுவதை எம்.எஸ்.தோனி வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் […]

