Share via:
லக்னோவில் மேற்கூரை இடிந்து விழுந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆனந்த் நகர் பகுதியில் உள்ள பழைய ரெயில்வே காலனியில் உள்ள வீட்டின் மேல்கூரை திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. அப்போது வீட்டிற்குள் இருந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
சத்தம் கேட்டு அதிர்ச்சியான அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற அவர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை முடுக்கிவிட்டனர்.
அப்போது இடிபாடுகளுக்குள் படுகாயங்களுடன் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் இருந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.