6 கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள்! தெலுங்கானாவில் காய் நகர்த்தும் காங்கிரஸ்!

தெலுங்கானாவில் கவர்ச்சிகரமான 6 தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த ஆண்டு (2023) இறுதியில் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது தெலுங்கானாவில் சந்திரசேகர்ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியில் உள்ளது. எனவே வரப்போகும் எனவே பி.ஆர்.எஸ். கட்சி, காங்கிரஸ்,பா.ஜ.க. என மும்முனைப் போட்டியால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியின் 2வது கூட்டம் தெலுங்கானாவில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் ரங்கரெட்டி மாவட்டம் […]
புதர், குகைகளில் மறைந்திருக்கும் பயங்கரவாதிகள்! காட்டிக் கொடுத்த டிரோன் கேமரா!

5வது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை! காஷ்மீரில் தொடர்ந்து 5வது நாளாக டிரோன்கள் உதவியுடன் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளை முழுவீச்சில் தேடி வருகின்றனர். காஷ்மீரில் அனந்த்நாக் மற்றும் ரஜவுரி மாவட்டங்களில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வந்த போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து அனந்த்நாக் மாவட்டம் காடோல் வனப்பகுதியில் கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் […]
சென்னை தீவுத்திடலில் உணவுத் திருவிழா! 130 அரங்குகள் அமைப்பு!

சென்னை தீவுத்திடலில் 3 நாட்களாக நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் உணவுகளுடன் சேர்த்து கலை விழாவும் களை கட்டி வருவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். நேற்று (செப்.17) முதல் நாளை (செப். 19) வரை என தொடர்ந்து 3 நாட்களாக சென்னை தீவுத்திடலில் உணவுத் திருவிழா களை கட்டி வருகிறது. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து இந்த உணவுத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. வார இறுதி […]
சென்னையில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி! 10,000 போலீசார் குவிப்பு!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை முன்னிட்டு சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதிலும் இன்று (செப்.18) விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் களைகட்டி வரும் விநாயகர் சதுர்த்தி தின விழாவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க 4 ஆயிரம் இடங்களில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு எந்தெந்த இடங்களில் […]
8வது முறையாக ஆசியக் கோப்பை: இந்தியாவின் பெருமை பட்டியல் இதோ!

16வது ஆசியக் கோப்பையை நேற்று (செப்.17) இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தட்டிச் சென்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. அப்போது முதல் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்ததுதான். அதன் பின்னர் முகமது சிராஜ் தொடர்ந்து 6 விக்கெட்டுகளை மிகவும் குறுகிய இடைவெளியில் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். அதே போல் ஹர்திக் […]
மழை நீர் தேங்கிய குழியில் விழுந்த சிறுவன் பலி! தாம்பரத்தில் சோகம்!

மழை நீர் தேங்கியிருந்த குழியில் தவறி விழுந்த 11வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னையை அடுத்த தாம்பரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் சானிடோரியம் பகுதியைச் சேர்ந்த விஷ்வா என்ற 11 வயது சிறுவன் அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் விஷ்வா தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து விளையாட சென்றார். அப்பகுதி தனியார் பள்ளிக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள ரெயில்வே இடமாகும். கடந்த சில நாட்களாக […]
மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த சென்னை மாநகராட்சி ஆணையர்! என்ன சொன்னார் தெரியுமா?

சென்னையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு ஒழிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. அதோடு சளி, காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசும் போது, ‘‘சென்னையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு ஒழிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொசுக்கள் நன்னீரில் முட்டையிட்டு 3 நாட்களில் புழுக்களாக மாறி, […]
செப்.24 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! ஏன் தெரியுமா?

நிபா வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் செப்டம்பர் மாதம் 24ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து அண்டை மாநிலங்களையும் அச்சுறுத்தி வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது புதுச்சேரியில் சுகாதாரத்துறை எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் உள்ள மாஹே பிராந்தியத்தில் நோய் பரவல் அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாக மாஹே பிராந்திய […]
ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி! இலங்கை அணி டாஸ் வென்றது!

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் (ஆகஸ்ட்) 30ம் தேதி தொடங்கியது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்றின் முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் தோல்வியடைந்ததால் வெளியேற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இலங்கை, வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தது. ரன் ரேட் அடிப்படையில் […]
5 விருதுகளை தட்டிச் சென்ற விக்ரம் திரைப்படம்! சைமா விருதுகள் 2023

துபாயில் நடைபெற்ற சைமா 2023 விருது வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படத்துறை சார்பாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் அதிக விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.ஃ கடந்த 2012ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வரும் சைமா விருதுகள் திரையுலகத்தினரின் பெரிய கனவு என்றே சொல வேண்டும். கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற சைமா விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு துபாயில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. […]

