News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

கடல் வளங்களை ஆய்வு செய்வதற்காக ‘மத்ஸ்யா 6000’ வாகனத்தை கடலுக்குள் செலுத்தும் சமுத்யாரன் திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளது உலக விஞ்ஞானிகளின் இருக்கை நுனிக்கே கொண்டு சென்றுள்ளது.

நிலவை ஆராய்வதற்காக சந்திரான்3 விண்கலத்தை இந்தியா கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. அதைத்தொடர்ந்து சந்திராயன் 3 விண்ணில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அங்கிருந்து புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது.

அதைத்தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்&1 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக கடந்த 2ம் தேதி (செப்டம்பர்) விண்ணில் ஏவி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஆதித்யா எல்&`1 ஒரே நேரத்தில் பூமியையும், நிலவையும் சேர்த்து எடுத்து அனுப்பிய செல்பி விஞ்ஞான உலகின் ஒரு மைல் கல்லாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சந்திராயன்&3, ஆதித்யா எல்&1 விண்கலங்களை தொடர்ந்து தற்போது ‘மத்ஸ்யா 6000’ என்ற வாகனத்தை புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.

வாகனத்தின் வடிவமைப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கடல் வளத்தை ஆராய்ச்சி செய்ய உள்ள மத்ஸ்யா 6000 வாகனம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் மற்றும் கடல் சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உள்ளது.

மத்ஸ்யா 6000 வாகனத்தை புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கிரண் ரிஜிஜு கூறும்போது, ‘‘மத்ஸ்யா 6000 நீர்மூழ்கி கலன், சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கடலின் 6 கி.மீட்டர் ஆழத்திற்குள் 6 மனிதர்களுடன் செல்ல உள்ள மத்ஸ்யா 6000 வாகனம் இந்தியாவின் முதல் திட்டமாகும். இது மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு, சுற்றுலா, மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் நீல வணிகத்திற்கு மிகவும் ஆதரவாக இருக்கும் என்று’’ பதிவிட்டு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link