Share via:
உலகிலேயே நீண்ட முடி கொண்ட சிறுவன் என்ற கின்னஸ் சாதனையை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் படைத்துள்ளார்.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற பல்வேறு மனிதர்களை நாம் பார்த்து வியந்திருப்போம். கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்காகவே சிலர் நகங்களை வளர்ப்பது, கண் இமைகளை வளர்ப்பது, தலைமுடியை வளர்ப்பது என அட்டகாசம் செய்வார்கள்.
அந்த வகையில் தற்போது உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சிதக்தீப் சிங் சாஹல் என்ற 15 வயது சிறுவன் பெண்களை விட நீளமான கூந்தலை வளர்த்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
சிறுவன் சிதக்தீப்சிங் சாஹலின் இந்த கின்னஸ் சாதனையை கின்னஸ் தன்டைய எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவுடன் கடந்த 14ம் தேதி (செப்.) வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டீசன்கள் பலர் அதனை வைரலாக்கி வருகிறார்கள். அந்த வீடியோவில் சிறுவன் பேசும்போது, என்னுடைய தலைமுடி மிகவும் நீளமாக அடர்த்தியாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். அவர்களின் தலைமுடி அப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நான் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவன். இது கடவுளின் பரிசு. சீக்கிய மதத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று, தலைமுடியை பராமரிப்பது’’ என்று தெரிவித்துள்ளார்.
தலைமுடி உதிர்வது நின்றால் போதும், நீளமான வளரக் கூட வேண்டாம் என்று கண்ணீர் விடும் பெண்கள் இந்த வீடியோவை பார்த்து, ‘‘அட நமக்கு இப்படியெல்லாம் வளரவில்லையே’’ என்று ஏக்கத்துடன் முணுமுணுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

