Share via:
விஜய் முதல்வராக பொறுப்பேற்கும் நேரு விளையாட்டு அரங்கம் அல்லோலகல்லோலப்படுகிறது. ஏராளமான தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள். காவலர்கள்
அமைத்துள்ள தடுப்புகளை தாண்டி தொண்டர்கள் உள்ளே நுழைந்து காட்டுக்கத்தல் போட்டு வருகிறார்கள்.
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாட்கள் மட்டுமே
தமிழகம் வந்திருந்த ராகுல் காந்தி தற்பொழுது பதவியேற்பு விழாவிற்கு முதல் சிறப்பு விருந்தினராக
வந்திருக்கிறார்.
இந்த நேரத்தில் முதல் அமைச்சரானவர்களில் இளையவர் விஜய் என்று நினைத்தால்,
இல்லை என்று பதிவுகின்றன. ஏனென்றால் ஜெயலலிதா 43 வயதிலும் கருணாநிதி 44 வயதிலும் முதல்வராகிவிட்டனர்.
காமராஜர், ஓ.பன்னீர்செல்வம் கூட 50 வயதில் முதல்வர் ஆகிவிட்டனர். ஜோசப் விஜய் தன்னுடைய
51வது வயதில் முதல்வர் ஆகியிருக்கிறார்.
பதவி ஏற்பு எளிதாகிவிடும். ஆனால் ஃபுளோர் டெஸ்ட்தான் விஜய்க்கு
ஒரிஜினல் டுவிஸ்ட் உள்ளது என்கிறார்கள். ஏனென்றால் திமுகவின் ஸ்லீப்பர்செல் ஆட்களுடனே
பதவி ஏற்கிறார் விஜய்.
இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம்லீக் எல்லாமே திமுகவின்
ஆட்கள். இப்போதும் திமுகவின் கூட்டாளிகள்.அதோடு அதிமுகவில் இருந்து சிலர் எதிர்த்து
வாக்களித்து பரபரப்பைக் கிளப்புவார்கள் என்று தெரிகிறது.
இந்த விழாவுக்கு த்ரிஷா வந்து பெரும் பரபரப்பை சேர்த்திருக்கிறார்.
விஜய் அம்மா, அப்பாவைக் கட்டிப்பிடித்து புதிய அரசியலை ஆரம்பித்துள்ளார்.
