News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற இருந்த நிலையில் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

 

கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 28 எதிர்க்கட்சியினர் ஒன்றாக இணைந்துள்ள கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிட்டனர். இந்தியா கூட்டணி என்ற பெயருக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் இக்கூட்டணியினர் தொடர்ந்து தங்கள் கட்சிப்பணிகளை செய்து வருகின்றனர்.

 

இதுவரை இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் நல்ல முறையில் நடந்து முடிந்துள்ளது.

 

இதைத்தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில் முதல் பொதுக்கூட்டம் மத்திய பிரதேச மாநிலம் தலைநகரான போபாலில் நடைபெற இருந்தது. வருகிற அக்டோபர் மாதம் 2ம் தேதி முதல் பொதுக்கூட்டம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

 

இந்நிலையில் மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற இருந்த இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். ஆனால் பொதுக்கூட்டம் ஏன் திடீரென்று ரத்து செய்யப்பட்டது? என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இது குறித்த வீடியோ தற்போது எக்ஸ் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

முதல் பொதுக்கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது ஏன் என அரசியல் நோக்கர்களும், விமர்சகர்களும் தங்களின் தனிப்பட்ட கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link