மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்! புதிய நாடாளுமன்றத்தில் புதிய வரலாறு!

புதிய நாடாளுமன்ற மக்களவையில் ஒரு மனதாக மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறி புதிய வரலாற்றை படைத்துள்ளது. நாரி சக்தி வந்தன் அதிநியம் என்று பெயரிடப்பட்ட இந்த மசோதா வரலாற்றில் முக்கியம் இடம் பிடித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் சட்ட மசோதா என்ற பெருமையை பெற்ற மகளிர் 33% சதவீத இட ஒதுக்கீடு மசோதா ஒருமனதாக முழு ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா […]
அக்கினேனி நாகேஸ்வர ராவின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

இந்திய நடிகர் நாகேஸ்வர ராவின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அக்கினேனி குடும்பத்தினர் மற்ற பிரபலங்கள் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் குவிந்ததால் அவ்விடமே விழாக்கோலம் பூண்டது. தென்னிந்திய நடிகர்களில் முக்கியமானவர் அக்கினேனி நாகேஸ்வரராவ் 255க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2014ம் ஆண்டு காலமான நாகேஸ்வரராவின் மகன், அவரது மகன் என திரைத்துறையில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். மேலும் தென்னிந்திய நடிகர்களில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இக்குடும்பம் முதல் இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து நாகேஸ்வரராவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு […]
ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதிக்க எடப்பாடி மனு! இன்று விசாரணை!

அ.தி.மு.க. கட்சியின் பெயர், பேரறிஞர் அண்ணாவின் படம் பொறித்த கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இரட்டைக்குழலாக இருந்த அ.தி.மு.க.வை தற்போது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக நடத்தி வருகிறார். மேலும் தான் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதையும் தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி […]
சீமான்- விஜயலட்சுமி வழக்கில் அதிரடி திருப்பம்! போலீசை திட்டித்தீர்த்த உயர்நீதிமன்றம்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி விவாகரத்தில் மெத்தனமாக செயல்பட்டதாக காவல்துறையை உச்சநீதிமன்ற நீதிபதி கடுமையாக சாடினார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிவிட்டார் என்று நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி, சீமான் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக […]
மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் எச்சரிக்கை! அ.தி.மு.க.வில் குளறுபடி!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திடீரென்று கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் புகைந்து கொண்டிருந்த தீ தற்போது கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி பூதாகரமாக வெடித்துள்ளது. முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை மற்றும் ஜெயலலிதா பற்றி அவதூறு பரப்பும் வகையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்த நிலையில் இருகட்சிக்கும் இடையில் விரிசல் தொடங்கியது. இந்த நேரத்தில்தான் எடப்பாடி பழனிசாமி, திடீரென்று டெல்லிக்கு சென்று பா.ஜ.க. மூத்த தலைவரான அமித்ஷாவை சந்தித்து […]
முதல்வர் அலுவலகம் முற்றுகை! பரபரப்பு பின்னணி தகவல்கள்!

சென்னை கொளத்தூரில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மின்வாரியத்தில் தற்காலிக பணியிடங்கள் நிரப்பும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்து இருந்தனர். தங்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும் என்று காத்திருந்த போது, ஒரு சிலருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேலை கிடைக்காதவர்கள் சென்னை கொளத்தூரில் உள்ள முதலமைச்சர் அலுவலகம் முன்பு ஒன்றாக திரண்டு […]
தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

தமிழகம் முழுவதும் மொத்தம் 40 இடங்களுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் சப்ளை செய்து வரும் நிறுவனங்களுக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய மொத்தம் 40 இடங்களில் இன்று காலை முதலே வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னர் சென்னை உள்பட பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய அதே இடங்களில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. […]
உலகக்கோப்பை தொடருக்கான பாடல் வெளியீடு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை பிரபலப்படுத்தும் முயற்சியில் புதிய பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது ஐ.சி.சி. நிறுவனம். 13வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற உள்ள நிலையில் இங்கிலாந்து, […]
இந்தியா கூட்டணியில் முதல் விரிசல்! பரபரப்பு பின்னணி!

இந்தியா கூட்டணியில் இருந்து சி.பி.எம். கட்சி திடீரென்று விலகியது அக்கூட்டணியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பா.ஜ.க.வின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் ஒரே நேர்கோட்டு எண்ணத்தில் உருவானதுதான் இந்தியா கூட்டணி. இக்கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எதிராக அணி திரண்ட காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்திருந்தன. இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2வது கூட்டம் கடந்த ஜூலை மாதம் […]
திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்நபன திருமஞ்சனம்! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 9 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு அலங்கார, ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதனை காண ஒவ்வொரு நாளும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சுவாமி ஆகிய உற்சவ மூர்த்திகளின் சிறப்பு அலங்காரம் பக்தர்களை பரவசப்படுத்தியது. சுவாமிகளின் அலங்காரத்திற்கு தேவையான மாலைகள், கிரீடம் மற்றும் உலர் பழங்கள், சந்தனம், மஞ்சள், உலர்மலர்களால் செய்யப்பட்ட மாலைகளை […]

