News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

புதிய நாடாளுமன்ற மக்களவையில் ஒரு மனதாக மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறி புதிய வரலாற்றை படைத்துள்ளது. நாரி சக்தி வந்தன் அதிநியம் என்று பெயரிடப்பட்ட இந்த மசோதா வரலாற்றில் முக்கியம் இடம் பிடித்துள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் சட்ட மசோதா என்ற பெருமையை பெற்ற மகளிர் 33% சதவீத இட ஒதுக்கீடு மசோதா ஒருமனதாக முழு ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா எங்களுக்கான திட்டம் என்றும் எங்கள் ஆட்சியில் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது என் பெருமையுடன் தன் வாதங்களை முன்வைத்தது.

கடந்த 18ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கி அன்று மாலை நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் மகளிருக்கான 33% சதவீத இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதம் நடைபெற்றது.

கூட்டத்தொடரின் 2வது நாளில் இதற்கான விவாதங்கள் தொடங்கின. இதில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மசோதாவை தாக்கல் செய்து பேசினார்.

இந்த மசோதா குறித்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசும்போது, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கனவு இந்த மகளிர் 33% இட ஒதுக்கீடு என்றும், தாமதமின்றி விரைந்து அமலுக்கு கொண்டு வரவேண்டும்’’ என்று தனது ஆதரவை தெரிவித்துக் கொண்டார்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அரசியல் சாசன மசோதா என அழைக்கப்படும். மூன்றில் 2 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்பட்ட நிலையில் வாக்கெடுப்பில் 454 பேர் ஆதரவாகவும், 2 பேர் மட்டும் எதிராகவும் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து மசோதா நிறைவேறியதாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். 

அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., தேசியவாத காங்கிரஸ்,  ஐக்கிய ஜனதா தளம், இடது சாரிகள், சமாஜ்வாதி என அனைத்து கட்சிகளும் ஒருமனதாக முழு ஆதரவுடன் மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதாவை ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது. பேச்சளவில் இருந்த 33% இட ஒதுக்கீடு என்ற கனவு தற்போது நனவாகியுள்ளது மகிளர் மத்தியில் பெரும் நம்பிக்கை¬யும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link