Share via:
இந்திய நடிகர் நாகேஸ்வர ராவின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அக்கினேனி குடும்பத்தினர் மற்ற பிரபலங்கள் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் குவிந்ததால் அவ்விடமே விழாக்கோலம் பூண்டது.
தென்னிந்திய நடிகர்களில் முக்கியமானவர் அக்கினேனி நாகேஸ்வரராவ் 255க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2014ம் ஆண்டு காலமான நாகேஸ்வரராவின் மகன், அவரது மகன் என திரைத்துறையில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். மேலும் தென்னிந்திய நடிகர்களில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இக்குடும்பம் முதல் இடத்தில் உள்ளது.
இதைத்தொடர்ந்து நாகேஸ்வரராவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு (செப்.20) அன்னபூர்ணா ஸ்டூடியோவில் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் நடிகரும் நாகேஸ்வரராவின் மகனுமான நாகார்ஜுனா, நாகேஸ்வரராவின் பஞ்சலோக சிலையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். மேலும் நடிகர்கள் ராம் சரண், மகேஷ் பாபு மற்றும் நம்ரதா உள்ளிட்ட பிரபலங்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகரும், நாகேஸ்வரராவின் பேரனுமான நாக சைதன்யா தனது தாத்தாவின் தொழில் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து உரை நிகழ்த்தினார்.
அக்கினேனி குடும்பத்தைச் சேர்ந்த நாகர்ஜுனா, நாக சைதன்யா, அகில், அமலா உள்ளிட்டோர் விழாவுக்கு வந்தவர்களை சிறப்பாக வரவேற்றனர்.
நாகேஸ்வரராவின் 100வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.