News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி விவாகரத்தில் மெத்தனமாக செயல்பட்டதாக காவல்துறையை உச்சநீதிமன்ற நீதிபதி கடுமையாக சாடினார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிவிட்டார் என்று நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி, சீமான் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக அதே 2011ம் வருடம் கடிதம் மூலம் வாபஸ் பெற்றார். பின்னர் 12 வருடங்கள் கழித்து மீண்டும் 2023ம் ஆண்டு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் மீண்டும் சீமான் மீது விஜயலட்சுமி புகார் அளித்தார். பின்னர் மீண்டும் வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

இதற்கிடையில் 12 வருடங்களுக்கு பின்னர் அரசியல் நோக்கத்துடன் மீண்டும் இந்த வழக்கு குறித்து விசாரிப்பதால், இந்த விசாரணைக்குதடை விதிக்க வேண்டும் என்று சீமான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், விஜயலட்சுமி 2011ல் அளித்த புகாரை 2012ல் வாபஸ பெற்றநிலையில் மீண்டும் 2023ம் ஆணடு புகார் அளித்து ஒரு மாதத்தில் வாபஸ் பெறப்பட்டதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மனு நகல் தரப்படவில்லை என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மனு நகலை வழங்க வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார். மேலும்கடந்த  2011 ஆண்டில் இருந்து 2023ம் ஆண்டு வரை நடிகை விஜயலட்சுமி அளித்த புகார்களை வாபஸ் பெறப்பட்ட நிலையில் ஏன் வழக்கை இத்தனை ஆண்டுகள் நிலுவையில் வைத்திருக்க  காரணம் என்ன? என்றும் இது குறித்து காவல்துறை உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை வருகிற 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link