மாற்றி அமைக்கப்படும் ஆட்டோ கட்டணம்! தமிழக அரசு தகவல்!

தமிழகத்தில் இன்னும் 12 வாரங்களுக்குள் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி ஆட்டே கட்டணத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு குறித்த விசாரணை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு தொடங்கியது. தமிழக அரசு […]
நியூசிலாந்தில் நிலநடுக்கம்! 14,000 பேர் தெருக்களில் தஞ்சம்!

நியூசிலாந்தில் இன்று காலை உணரப்பட்ட நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் குடும்பத்துடன் தெருக்களில் தஞ்சமடைந்தனர். 5 மில்லியன் அளவுக்கு மக்களைக் கொண்ட நாடு நியூசிலாந்து. நிலநடுக்கம் மற்றும் எரிமலைகள் வெடிப்புகள் அடிக்கடி நடைபெறும் பசிபிக் கடலை சுற்றியுள்ள ரிங் ஆப் பையர் என அழைக்கப்படும் பகுதியில்தான் இந்த நியூசிலாந்து அமைந்துள்ளது. அதனால் நியூசிலாந்தில் அடிக்கடி நிலநடுக்கங்கள் உணரப்படுகின்றன. இந்நாட்டின் முக்கிய நகரமான கிறிஸ்சர்ச்சில் இருந்து மேற்கே 124 கி.மீட்டர் தொலைவில் தென்மத்திய தீவு அமைந்துள்ளது. இங்கு ரிக்டர் அளவுகோலில் […]
காவிரி விவகாரம்! கர்நாடக முதலமைச்சர் எம்.பி.க்களுடன் டெல்லி பயணம்!

காவிரி விவாகரம் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று டெல்லி செல்கிறார். தமிழகத்திற்கு கர்நாடகாவிற்கும் இடையிலான காவிரி விவகாரம் எந்த தலைமுறையில்தான் விடிவுக்கு வரும் என்பது பொதுமக்களின் விடைதெரியாத கேள்வியாக உள்ளது. அந்தந்த காலகட்டங்களில் ஆட்சியில் இருக்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் காவிரி நீர் குறித்த பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து புதுடெல்லியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், மத்திய நீர்வளத்துறை மந்திரி […]
அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீட்டில் ரெய்டு! முக்கிய பின்னணி!

அமைச்சர் செந்தில்பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீட்டிற்குள் புகுந்த வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மேற்கொண்டதாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14ம்தேதி கைது செய்யப்பட்டார். அவரது கைது சட்டப்படியானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் […]
ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத் மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். ரவீந்திரநாத்குமாருக்கும் ஆனந்தி என்பவருக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரவீந்திரநாத்குமாருக்கும், அவரது மனைவி ஆனந்திக்கும் இடையில் சமீபகாலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் விரைவில் விவாகரத்து செய்துவிட்டு பிரியப் […]
பிரபல தயாரிப்பாளரை மணக்கும் திரிஷா! வெளிவந்த ரகசிய தகவல்கள்!

தமிழ் திரையுலகில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவரின் இளமை மாறாத தோற்றம் 40 வயதை தாண்டியும் இவரை கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இருக்க செய்துள்ளது. ஆரம்ப காலத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த திரிஷா இடையில் இருக்கும் இடமே தெரியாமல் இருந்தார். அதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தை தொடர்ந்து தற்போது கோலிவுட்டில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது நடிகை திரிஷா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜயுடன் […]
ரஜினிகாந்த் – பி.சி.சி.ஐ. செயலாளர் திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி இதோ!

உலகக்கோப்பை 2023ம் ஆண்டுக்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து வழங்கினார். 13வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரை காண கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். ஏற்கனவே 8வது முறையாக ஆசியக் கோப்பை தொடரின் […]
33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்! முக்கிய தகவல்கள்!

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் கூடியுள்ள சிறப்பு கூட்டத்தொடரில் தற்போது 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று சிறப்புக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. அதன்படி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க வழி வகை செய்யும் மசோதாவான இதற்கு ‘‘நாரிசக்தி வந்தன்’’ என்று பெயரிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் சட்ட மசோதா என்ற பெருமையை […]
நிபா வைரஸ் தொற்று இல்லை: கோழிக்கோட்டில் தளர்வுகள் அறிவிப்பு!

புதியதாக யாருக்கும் நிபா வைரஸ் தொற்று ஏற்படாததால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வந்தது. எனவே கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆத்தஞ்சேரி, மருதோங்கரை, குட்டியடி உள்ளிட்ட பஞ்சாயத்துகளில் உள்ள மக்கள் வெளியே செல்வதையும், மற்றவர் உள்நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் அத்தியாவசியத் தேவைக்காக கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட இடங்களில் தளர்வுகளை […]
புதிய கட்டிடத்தில் இன்று நாடாளுமன்ற கூட்டம்! இத்தனை தகவல்களா?

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடரின் அமர்வுகள் இன்று முதல் நடைபெற உள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று (செப்.18) சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இந்தியாவின் கடந்த 75 ஆண்டு கால ஜனநாயக வரலாறு குறித்து விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று (செப்.19) முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் தங்கள் அலுவல்களை தொடங்கி செயல்பட ஆரம்பித்து இருக்கிறார்கள். புதிய நாடாளுமன்ற கூட்டத்தில் இன்று முதல் […]

